Thursday, February 24, 2011

எக்ஸெல் எர்ரர் செக்கில்

எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், டேட்டாவினை செல்களில் நிரப்புகையில், அதன் பின்புலத்தில், எக்ஸெல், செல்களில் இடப்படும் டேட்டாவில் ஏதேனும் பிழைகள் இருக்கின்றனவா என்று சோதனை இடும்.
பிழைகள் இருந்தாலும், அல்லது எக்ஸெல் பிழை என முடிவு செய்தாலும், செல்லின் இடது ஓரத்தில் மேலாக, பச்சை நிறத்தில் ஒரு சிறிய முக்கோணம் ஒன்றினை ஏற்படுத்தும். இந்த முக்கோணங்கள் எனக்குக் காட்டப்படத் தேவையில்லை; என்னால் பிழைகள் இல்லாமல் டேட்டாவினை அமைக்க முடியும். அப்படியே பிழைகள் இருந்தால், நானாக அவற்றைக் கண்டறிந்து திருத்திக் கொள்ள முடியும்; எனக்கு இந்த முக்கோணங்கள் எல்லாம் வேண்டாம் என நீங்கள் எண்ணினால், அப்படியே செட் செய்துவிடலாம். கீழ்க்குறிப்பிட்டவாறு செயல்படவும். (இந்த டிப்ஸ் எக்ஸெல் 2002, 2003, மற்றும் 2007 ஆகிய தொகுப்புகளுக்குப் பயன்படும்.)
1. எக்ஸெல் Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் Options டயலாக் பாக்ஸினைத் தரும்.
2.இந்த விண்டோவில் Error Checking என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இதில் Enable Background Error Checking என்ற பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பின், அதனை நீக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதுவரை காட்டப்பட்டு வந்த பச்சை நிறத்திலான, முக்கோணங்கள் எல்லாம் மறைந்து, இனி புதிதாக எதுவும் தோன்றாது.