Sunday, April 17, 2011

ஹோலி கொண்டாட லாவா மொபைல்

வட மாநிலங்களில், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரிப் பூசி, ஹோலி கொண்டாடுவது, மகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகையாகும். இதனை ஒட்டி, மொபைல் தயாரிக்கும் லாவா நிறுவன, வண்ணங்கள் நிறைந்த மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கியுள்ளது.
இதன் வால் பேப்பரைப் பல வண்ணங்களில் இருக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.
கே.கே.டி. 35 (KKT 35) என அழைக்கப்படும் இந்த மொபைல் போன் கீழ்க் குறித்த அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இரண்டு சிம் இயக்கம் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்த 1400 எம்.ஏ.எச். பேட்டரி தரப்பட்டுள்ளது. 2.4 அங்குல வண்ண டி.எப்.டி. ஸ்கிரீன், யு.எஸ்.பி. இணைப்பு, டிஜிட்டல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. 3GP, MP4 and AVI ஆகிய பார்மட்டுகளை இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,950 எனக் குறிக்கப்பட்டுள்ளது.