Sunday, April 10, 2011

பிடித்த பாடல்களை இணையத்தில் தேடுவதற்கு

ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இது போன்றவர்கள் இணையத்தை அதிகம் நாடுவதே பாடலை கேட்க தான்.இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடி பிடித்து கேட்க வேண்டும். இல்லையெனில் நாம் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும்.
ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. இது போன்ற சிக்கல்களை தீர்க்க தான் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் கணணியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும்.
பின் Search for Music என்ற செக் பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப் பெறவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் Shortcut உள்ளது. இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். வேண்டிய பாடலை எளிமையாக தேடிப் பெற முடியும்.
மேலும் இணையை இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு எந்த உலவியும் தேவையில்லை. இந்த மென்பொருளின் உதவியுடனே பாடல்களை தேடிப் பெற முடியும்.
தரவிறக்க சுட்டி