Tuesday, April 5, 2011

நெருப்புநரி(firefox) உலவியின் எழிலை மேம்படுத்த

நெருப்புநரி உலவியினுடைய புதிய பதிப்பான 4 தற்போது வெளியிடப்பட்டது. இந்த உலவியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.பெருமளவில் இணைய பயனாளர்களால் பயன்படுத்தப்படும் உலவிகளில் முதலிடத்தில் இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான உலவியாக நெருப்புநரி உலவி தற்போது உருவெடுத்துள்ளது. அந்த அளவிற்கு நெருப்புநரியினுடைய வேகம் உள்ளது. நெருப்புநரி உலவியினுடைய புதிய பதிப்பு தற்போது 4 வெளியிடப்பட்டுள்ளது.
நெருப்புநரி 4 உலவினுடைய எழிழை மேம்படுத்த ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை பயன்படுத்தி பல்வேறு விதமான மாற்றங்களை செய்ய முடியும். இணையத்தின் உதவியுடன் நீட்சியை நெருப்புநரி உலவி 4 ல் பதிந்து கொள்ளவும்.
பின் ஒருமுறை உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அதில் ஒரு ஐகான் தோன்றும். அந்த ஐகானை அழுத்தி விண்டோவில் உங்களுக்கான மாற்றங்களை செய்து கொள்ள முடியும். இதுபோன்ற பல்வேறு மாற்றங்களை செய்ய முடியும்.
நெருப்புநரி டேப்பினுடைய கலர், அகலம், உயரம் போன்றவற்றை மாற்றங்களை செய்து கொள்ள முடியும். டூல் பாரினுடைய கலர், அகலம், உயரம், லிங் போன்றவைகளையும் நம்முடைய விருப்பபடி மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் அட்ரஸ்பாரினுடைய பட்டையையும் மாற்றிக் கொள்ள முடியும். மொத்தத்தில் நெருப்புநரி 4 உலவியை நமது விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இந்த நீட்சியானது நெருப்புநரி 4 உலவியில் மட்டுமே செயல்படக்கூடியது ஆகும்.
தரவிறக்க சுட்டி