'ஹெல்த் செக்கப் அவசியம்’ -சமீபகாலமாக இந்த வலியுறுத்தல் அதிகமாகக் கேட்கிறது. அதே நேரம் 'ஹெல்த் செக்கப்புக்கு பணம் அதிகம் தேவைப்படும். வியாதியே இல்லாதபோது எதற்கு ஹெல்த் செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவு இல்லை.
ஹெல்த் செக்கப் அவசியமா... இல்லையா..? ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.பி.கணேசன் பதில் சொல்கிறார்.
''எதிலுமே வரும்முன் காப்பதுதான் நல்லது. ஒரு நோயை, வருவதற்கு முன் தடுப்பதன் மூலம் மருத்துவச் செலவுகளை வெகுவாகக் குறைக்க முடியும். நோயின் தீவிரத்தையும் உடலின் துன்பத்தையும் தவிர்க்க முடியும். அதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் ஹெல்த் செக்கப் செய்வது மிகமிக அவசியம்!'' என வலியுறுத்திய கணேசன் எதுபோன்ற நோய்களுக்குப் பரிசோதனை அவசியம் என்பதையும் விளக்கினார்.''பெண்களிடத்தில் நோய் பரிசோதனை மேற்கொள்வதில் விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறது. அவர்களின் இயற்கை குணமே, உடல் கஷ்டத்தை தாங்கிக்கொள்வதாக இருக்கிறது. சிலர், உடல் பாதிப்புகளை வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். இந்த மனநிலை பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். ஆண்களைவிட பெண்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் நோய்களின் எண்ணிக்கையும் அதிகம். மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது. சுமார் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் புற்றுநோய்களைக் கண்டறியும் சோதனைக்கு
''12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பொதுவாக முழு உடல் பரிசோதனை தேவை இல்லை. அது நல்லதும் இல்லை. கதிர் வீச்சு பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட நோய் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்துகொண்டால் போதும். நோய் பாதிப்புக்கான குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் ஆண்டுதோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொண்டால் போதும். குறிப்பிட்ட நோய் இருந்தால் அதற்கான பரிசோதனையை மட்டும் தனியே செய்துகொண்டால் போதும். நோய் வராமல் தடுக்க, வந்த பிறகு பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சரியான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும். பொருள் இழப்பையும், கால இழப்பையும் தவிர்க்க முடியும்!''