• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    எது மினரல் வாட்டர்?

    "மினரல் வாட்டர்' என கூறி, கோடை காலத்தில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. தாதுக்களின் அளவு மாறாமலும், புதிதாக எதுவும் சேர்க்கப் படாமலும் ஊற்றில் இருந்து நேரடியாகச் சேகரித்த நீரே மினரல் வாட்டராகும்.
    மினரல் வாட்டரில் தாது உப்புகளின் அளவு குறையாமல் இருக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீருக்கும், தாது உப்புகள் உள்ள மினரல் வாட்டருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. வெறும் சுத்திகரிக்கப்பட்ட நீரே தற்போது மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் நீரை, அடைக்கப்பட்ட குடிநீர் என்று தான் கூற வேண்டும். அவற்றை மினரல் வாட்டர் என கூறக்கூடாது. பெட் பாட்டில்களில் அடைக்கப்பட்ட நீரை, சூரிய ஒளிபடும் வகையில் வைக்கக்கூடாது. பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தும் போது, அவை அடைக்கப்பட்ட தேதியைப் பார்த்து வாங்க வேண்டும்.