• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    காதல் சிறகை காற்றினில் விரித்து...

    குணம் நாடி... குற்றமும் நாடி... என்பது திருவள்ளுவரின் குறள்மொழி. குணமிருந்த காரணத்தால் மனதில் இடம் கொடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் காதலியின் கரம் பிடித்த இளைஞனின் கதை இது.

    வசதியான, கம்பீரமான இளைஞன் அவன். எந்தப் பெண்ணுக்கும் அவனைப் பிடித்துவிடும். கல்லூரிப் பருவத்தில் வலியச் சென்று அவனிடம் பேச விரும்பிய பெண்கள் பலர். இருந்தாலும் அழகின் கர்வம் தலைக்கேறாததால், அமைதியாக பேசிச் சென்றுவிடுவான் அந்த இளைஞன். அவனை விரும்பி வந்த பெண்களை, ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை.
    நாட்கள் சென்றன. கல்லூரிப் பருவம் முடிந்து, தந்தையின் நிறுவனத்தில் பொறுப்பேற்றான் இளைஞன். புதிதாக வேலை கேட்டு வந்த பெண்ணை, மிகவும் பிடித்துப் போயிற்று. அந்தப் பெண் அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், லட்சணமாக இருந்தாள். நேர்முகத் தேர்வின் போது அவளின் பேச்சும், செயலும் அவனைக் கவர்ந்தன. வேலையும் கொடுத்தான். முதல்பார்வையில் கவர்ந்தவளின், நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் துவங்கினான். வேலையில் நேர்த்தியும், செயலில் நேர்மையுமாய், அவனை முழுமையாக ஆக்கிரமித்தாள். திருமணம் செய்தால், "இவளே மணப்பெண்' என்று முடிவெடுத்தான். அதற்கு முன் தனது காதலை அவளிடம் சொல்ல விரும்பினான்.
    குறிப்பிட்ட வேலையை செய்யச் சொல்வதற்காக, தன் அறைக்கு அவளை அழைத்தான். வேலையை கொடுத்த கையோடு, "உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. நீ என்னை விரும்புகிறாயா' என்றான். கேள்வியின் தாக்குதலில் பிரமித்து நின்றாள். "கேட்பது யாரோ அல்ல... தனக்கு மாதச்சம்பளம் தரும் பெரும் கோடீஸ்வரன். இவனை மறுப்பதா' என்று யோசித்து குழம்பினாள். அவளின் மவுனத்தை கலைத்து மீண்டும் கேட்டான்.
    அந்த நிமிடம் அவள் மனதில் அவன் ஆழமாக பதிந்து விட்டான். ஆனாலும் "பதில் என்னிடம் இல்லை. என் பெற்றோர் தான் அதை முடிவு செய்ய வேண்டும்,' என்றாள். தன் பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தான். ஆனால் அவர்கள் ஆத்திரப்பட்டனர். "கோடீஸ்வர அழகிகள் வரிசையில் நின்று திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். ஒன்றுமில்லாத, சாதாரண பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறாயே' என ஆதங்கமாக பேசி, மகன் மனதை மாற்ற முயன்றனர். கடைசியில் தங்கள் மனதை மாற்றிக் கொண்டனர்.
    ஆனால் பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை. "கோடீஸ்வரர் வீட்டில் பெண் கொடுத்தால், அடிக்கடி பார்க்க முடியாது. தகுதிக்கு மீறிய இடத்திற்கு அடிக்கடி செல்லவும் முடியாது' என்பதால் மறுத்தனர். பெண்ணோ... பெற்றவர்களை மீறத் தயாராக இல்லை. ஓராண்டு கழிந்தது. பையனின் உறுதியை கண்டு பெண்ணின் பெற்றோர் சம்மதித்தனர். இருவீட்டார்
    ஆசீர்வாதத்துடன் ஊரறிய பிரமாண்டமாய் திருமணம் நடந்தது.


    நீதி: காதல் அனைவருக்கும் பொதுவானது. அதை அணுகும் முறையில் தான் அவமானமும், வெகுமானமும் கிடைக்கும்.