சாதிக்கத் துடிக்கும் இளமை இதயங்களுக்கு,
நீங்கள் சாதிப்பதற்கும், உங்கள் கனவுகள் கை கூடுவதற்கும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது விகடன். இதுவரை 800 மாணவச் செல்வங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, பயிற்சியும் அனுபவமும் தந்து பக்குவப்படுத்தி, பரிமளிக்கச்செய்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம்... இதோ ஆரம்பம்!
கடந்த வருடங்களில் நடந்த பயிற்சித் திட்டங்களில் பங்குகொண்டு பயிற்சி பெற்றவர்கள்... இன்று பல துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில் துறை எனப் பரந்துபட்ட பல தளங்களில் உயிர்ப்போடு இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள், விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்கள். எந்தத் துறையாக இருந்தாலும், எவ்வளவு உயரம் சென்றாலும், 'நாங்கள் விகடனின் மாணவர்கள்’ என்று தங்களுக்கே உரிய தனி முத்திரையைத் தொடர்ந்து பதித்துக்கொண்டே இருக்கிறார்கள்!
புதுமைக்கு 'ஆ.வி’, நேர்மைக்கு 'ஜூ.வி’, பெண்மைக்கு 'அவள்’, அறிவுக்கு 'சுட்டி’, அருளுக்கு 'சக்தி’, செல்வத்துக்கு 'நாணயம்’, பயணத்துக்கு 'மோட்டார்’, வளத்துக்கு 'பசுமை’ என எட்டுப் பத்திரிகைகள் மூலம் எட்டுத் திக்கும் பரந்து விரிந்திருக்கும் விகடன் சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்து எழுதிக் குவிக்கும் வாய்ப்புக்காக ஏங்குபவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். இதோ... உங்களைத் தேடி வருகிறது இந்தப் பொன்னான வாய்ப்பு!
தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது. மற்றபடி 1.7.93-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர், தற்போது (2010-2011) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2011-2012) கல்லூரி படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2010-2011-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க வேண்டாம்.
இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.3.11-ம் தேதிக்குள் எங்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் (இந்த விண்ணப்பத்தை ஜெராக்ஸ் காப்பி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல் தொடர்புக்காக உங்களுடைய தொலைபேசி அல்லது செல்போன் எண்கள் அவசியம் தேவை. உங்களிடம் அவை இல்லையெனில், நண்பர்கள் அல்லது உறவினர்களின் எண்களையும் கொடுக்கலாம். விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.
ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் புகுந்து புறப்படும் த்ரில்லான களம் இது. உற்சாகமாக உங்களையும் அழைக்கிறோம்.
'இவர்கள் சந்தித்தால்’ என்று எதிரும் புதிருமாக இருக்கும் இருவரைக் கற்பனையில் சந்திக்கவையுங்கள். ஒபாமா - ஒசாமா, கருணாநிதி - ஜெயலலிதா, விஜயகாந்த் - ராமதாஸ் என நேரில் சந்தித்துக்கொள்ளாத இருவர் சந்தித்துக்கொண்டால், என்ன பேசுவார்கள், எப்படி ரியாக்ட் செய்வார்கள், எப்படி அந்த மீட்டிங் முடியும் என்பதைக் கற்பனையாக எழுதுங்கள். கட்டுரை குபீர் சிரிப்புக்கு கியாரண்டி தர வேண்டும்.
நெகிழவைக்கும் கதைகள்கொண்ட மனிதர்களைச் சந்தித்துக் கட்டுரை எழுதுங்கள். அபூர்வமான நோய் தாக்கிய பின்னரும் போராடி வாழ்பவர், பல வருட சிறைத் தண்டனைக்குப் பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர், எல்லா உறவினர்களையும் விபத்தில் பலி கொடுத்தவர், அறியாமையால் எல்லாவற்றையும் தொலைத்தவர் என வாழ்வின் உச்சபட்ச சோகத்தைப் பார்த்த பின்பும் உயர்ந்து நிற்கும் மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை அப்படியே உணர்ச்சி குறையாமல் எழுதி அனுப்புங்கள்.
(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், மேற்கூறிய கட்டுரையை அனுப்பத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக, இந்த விண்ணப்பம் வெளியான தேதிக்குப் பிறகு, தங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக எடுத்து,அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்ப வேண்டும். (ஐந்து படங்களுக்கு மேல் அனுப்ப வேண்டாம்). ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறத்திலும் தங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் நெகட்டிவ் அனுப்பக் கூடாது.
(இ) 'நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய இரண்டையும் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத் தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.3.11-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
எக்காரணம்கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. தபால்தலைகள் இணைக்கத் தேவை இல்லை. இத்திட்டம் சம்பந்தமாக கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ள இயலாது.
அடுத்த கட்டமாக, 17.4.11-ம் தேதியில் எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு ஊர்களில் நடக்க இருக்கிறது. முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள் மேற்கூறிய ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.
5.4.11-ம் தேதிக்குள் எங்களிடமிருந்து இந்த எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
நீங்கள் சாதிப்பதற்கும், உங்கள் கனவுகள் கை கூடுவதற்கும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது விகடன். இதுவரை 800 மாணவச் செல்வங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, பயிற்சியும் அனுபவமும் தந்து பக்குவப்படுத்தி, பரிமளிக்கச்செய்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம்... இதோ ஆரம்பம்!
கடந்த வருடங்களில் நடந்த பயிற்சித் திட்டங்களில் பங்குகொண்டு பயிற்சி பெற்றவர்கள்... இன்று பல துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில் துறை எனப் பரந்துபட்ட பல தளங்களில் உயிர்ப்போடு இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள், விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்கள். எந்தத் துறையாக இருந்தாலும், எவ்வளவு உயரம் சென்றாலும், 'நாங்கள் விகடனின் மாணவர்கள்’ என்று தங்களுக்கே உரிய தனி முத்திரையைத் தொடர்ந்து பதித்துக்கொண்டே இருக்கிறார்கள்!
புதுமைக்கு 'ஆ.வி’, நேர்மைக்கு 'ஜூ.வி’, பெண்மைக்கு 'அவள்’, அறிவுக்கு 'சுட்டி’, அருளுக்கு 'சக்தி’, செல்வத்துக்கு 'நாணயம்’, பயணத்துக்கு 'மோட்டார்’, வளத்துக்கு 'பசுமை’ என எட்டுப் பத்திரிகைகள் மூலம் எட்டுத் திக்கும் பரந்து விரிந்திருக்கும் விகடன் சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்து எழுதிக் குவிக்கும் வாய்ப்புக்காக ஏங்குபவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். இதோ... உங்களைத் தேடி வருகிறது இந்தப் பொன்னான வாய்ப்பு!
தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது. மற்றபடி 1.7.93-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர், தற்போது (2010-2011) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2011-2012) கல்லூரி படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2010-2011-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க வேண்டாம்.
இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.3.11-ம் தேதிக்குள் எங்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் (இந்த விண்ணப்பத்தை ஜெராக்ஸ் காப்பி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல் தொடர்புக்காக உங்களுடைய தொலைபேசி அல்லது செல்போன் எண்கள் அவசியம் தேவை. உங்களிடம் அவை இல்லையெனில், நண்பர்கள் அல்லது உறவினர்களின் எண்களையும் கொடுக்கலாம். விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.
ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் புகுந்து புறப்படும் த்ரில்லான களம் இது. உற்சாகமாக உங்களையும் அழைக்கிறோம்.
வாழ்த்துக்களுடன்...
- ஆசிரியர்
- ஆசிரியர்
விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்ப வேண்டியவை:
(அ) கீழ்க்கண்ட கட்டுரைகளில் ஏதாவது ஒன்றை சொந்தக் கையெழுத்தில், தெளிவாகப் புரியும்படி தமிழில் மட்டுமே எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும்.![](http://new.vikatan.com/news/images/bullet6.jpg)
(அல்லது)
![](http://new.vikatan.com/news/images/bullet6.jpg)
(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், மேற்கூறிய கட்டுரையை அனுப்பத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக, இந்த விண்ணப்பம் வெளியான தேதிக்குப் பிறகு, தங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக எடுத்து,
Publish Post
(இ) 'நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய இரண்டையும் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத் தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.3.11-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
எக்காரணம்கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. தபால்தலைகள் இணைக்கத் தேவை இல்லை. இத்திட்டம் சம்பந்தமாக கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ள இயலாது.
அடுத்த கட்டமாக, 17.4.11-ம் தேதியில் எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு ஊர்களில் நடக்க இருக்கிறது. முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள் மேற்கூறிய ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.
5.4.11-ம் தேதிக்குள் எங்களிடமிருந்து இந்த எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்,
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.