நேஷனல் பேங்க் பார் ரூரல் டெவலப்மெண்ட் எனப்படும் நபார்டு (NABARD) வங்கி இந்தியாவின் வளர்ச்சி வங்கிகளில் முக்கியமான ஒன்றாகும்.
விவசாய உற்பத்தி மற்றும் பணிகளை முன்னேற்றுதல், குடிசைத் தொழில் மற்றும் கிராமப்புற நிறுவனங்களை மேம்படுத்துதல் போன்ற கிராமப்புறம் சார்ந்த முன்னேற்றப் பணிகளில் இந்த வங்கி முக்கியப் பணியாற்றி வருகிறது. நபார்டு வங்கியில் 162 டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது: நபார்டு வங்கியில் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சலுகைகள் பற்றிய இதர விபரங்களை அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: நபார்டு வங்கியின் மேற்குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் திறனும் கூடுதல் தேவையாகும்.
தேர்ச்சி முறை: இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற வகைகளில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. எழுத்துத் தேர்வின் முதல் பிரிவில் அப்ஜெக்டிவ் வகைத் தேர்வும், இரண்டாம் பிரிவில் டெஸ்கிரிப்டிவ் வகைத் தேர்வும் நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வரும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையிலும், நமக்கு அண்டை மாநில மையங்களான பெங்களூருவிலும் நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: நபார்டு வங்கியின் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. கட்டணம் செலுத்துதல் தொடர்புடைய முழு விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிப்பதால் முதலில் உங்களுக்கென்று பிரத்யேகமாக உபயோகத்தில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி இருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.
முக்கிய தேதிகள்: ஆன்-லைன் பதிவு முடியும் நாள் : 05.04.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 22.05.2011
இணைய தள முகவரி: www.nabard.org