மா சாகுபடியாளர்களே! உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா?
அப்படியானால் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் பூசண நோய் ஏற்பட்டிருக்கலாம். இந்நோய்க்கு "பறவைக்கண் நோய்' என மற்றொரு பெயரும் உண்டு. இந்நோய் பிஞ்சு மற்றும் காய் பருவங்களில் தோன்றி, முதிர்ந்த மாங்காய்கள் பழுக்கும்பொழுது பெரிய ஒழுங்கற்ற கரும்புள்ளிகளாக மாறும். மேல் தோல்பகுதி கருமை நிறமாகிவிடும். பழத்தின் சதைப்பகுதி அழுகிவிடும்.
நோய் பரவும் விதம்: பூக்கும் பருவத்தில் மற்றும் பிஞ்சு, காய் பருவத்தில் பெய்யும் மழை, இந்நோய் பரவுவதற்கு சாதகமாக அமையும். பூசண வித்துக்கள் காற்றின் மூலம் பரவுகின்றன. பிஞ்சு மற்றும் காய்களில் கண்ணுக்குத் தெரியாத காயங்கள் உண்டானால் இந்நோய் அதிகம் காணப்படும்.
வருமுன் கட்டுப்படுத்த மா மரத்தில் இலைகள், கிளைகள், பூங்கொத்துக்கள் மற்றும் பிஞ்சுகளைப் பாதிக்கும் ஆந்த்ரக்னோஸ் நோயினைக் கட்டுப்படுத்த, சூடோ மோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் வீதம் தெளிக்க வேண்டும். பதினைந்து நாட்கள் இடைவெளியில் மறுமுறை தெளிக்க வேண்டும். நோய் வந்தபின் கட்டுப்படுத்த மான்கோசெப் இரண்டு கிராம் மருந்து, ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பன்டசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது குளோரோதலானில் இரண்டு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அறுவடை செய்வதற்கு முன் பதினைந்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
மருந்துக்கரைசல் பூங்கொத்துக்கள், கிளைகள், இலைகள், பிஞ்சுகளில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், பைட்டோவெட், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்துக்கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். முதிர்ந்த காய்களை அறுவடை செய்யும் முன் மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை கண்டிப்பாக தெளித்து பழங்களில் தோன்றும் பழ அழுகல்களைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் உழவர்கள் தங்களின் பயிர் பாதுகாப்பு பிரச்னைகளுக்குத் தகுந்த ஆலோசனை பெற பாதித்த பயிர் மாதிரியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பயிர் மருத்துவ நிலையத்தினை நேரில் அணுகுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ந.முருகேசன் கேட்டுக்கொள்கிறார்.
ந.முருகேசன், பேராசிரியர் மற்றும் தலைவர்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.