பிற்கால சோழர்கள் கி.பி., 13ம் நூற்றாண்டில் வலுவிழந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் தனது ஆளுகையை தமிழகத்தில் காலூன்றத் துவங்கியது.
இதன் மன்னர் "சம்பணர்' என்பவர், தென்தமிழகத்தின் மீது தனது பெரும் படையுடன், கி.பி., 1374ம் ஆண்டு தற்போதைய தேனி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள கம்பம் என்ற ஊருக்கு போர்புரிய வந்து கொண்டிருந்தார். அப்போது கூடலூர், கம்பத்தை இணைத்து குறுநில மன்னராக சோழ அரசன் ஆண்டு வந்தான். திடீர் படையெடுப்பு தகவலே தாமதமாக கிடைத்தது அவனுக்கு. சுதாரித்து தனது படையை திரட்டி போர் புரிய வைப்பதற்குள் காலதாமதமாகி விட்டது. சம்பணர் எளிதாக அப்பகுதியை கைப்பற்றினார். அந்த வெற்றியின் நினைவாக அப்பகுதியில் பெரிய கோட்டையை கட்டினார்.
விஜயநகரப் பேரரரசின் பிரதிநிதியான விஸ்வநாத நாயக்கர் மதுரையை ஆண்டபோது அவரும் ஒரு கோட்டையை கட்டி, அதில் கம்பராயர் பெருமாளுக்கும், காசி விஸ்வநாதருக்கும் கோயிலை கட்டினார். இப்பகுதியை கம்ப நாயக்கன், உத்தமநாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். இதனாலேயே கம்பம், உத்தமபுரம் பெயர் பெற்றது. விஸ்வநாத நாயக்கர் உருவாக்கிய 72 பாளையங்கள் அடங்கிய மதுரை மண்டலத்தில் கம்பமும் இருந்தது. கோட்டையைச் சுற்றி எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உயர்ந்த மாடங்கள் அமைக்கப்பட்டன. அதை இப்போதும் காணலாம். அந்த மாடம் மொட்டையாண்டி கோயிலாக மாறியுள்ளது.
அந்த கோட்டையின் வாசல் மட்டும் ஒரு அற்புத நினைவுச் சின்னமாக உள்ளது. கோட்டை வாசல் எனப்படுகிறது. இதிகாச காலத்தில் புகழ்பெற்ற ஊர் இது. சிலப்பதிகாரத்தில் கோவலன் இறந்த பின், வைகையாற்றின் கரையோரமாக கண்ணகி நடந்து வந்து கம்பம், கூடலூர் இடையில் உள்ள பாறையிலிருந்து விண்ணேறியதாக கூறப்படுகிறது. விண்ணேத்திப் பாறை தான் தற்போது வண்ணாத்திப் பாறையாக மாற்றமடைந்துள்து. கம்பம் நகருக்கு பக்கத்தில் ஓடும் ஆறு கண்ணகியின் நினைவாக, கூத்தனாட்சி ஆறு எனப்படுகிறது.
தெற்கே மலைமேல் உள்ள குமுளி என்ற ஊரிலிருந்து மலையாளிகள் இங்கு வந்து வீட்டுக்குத் தேவையான உணவு, தானியம், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதே ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள பழமையான நந்தகோபாலசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் திருவிழாவிற்கு வருவது பாரம்பரியம். அன்று ஒருநாள் மட்டும் கூட்டம் கூட்டமாக நடந்தே கம்பத்திற்கு வருகின்றனர்.
நந்தகோபாலன் கோயிலில் களிமண்ணால் செய்யப்படும் சிறிய மாட்டுப் பொம்மைகள் விற்பனை செய்யப்
படுகிறது. கிழக்கே மாரியம்மன் கோயில், மேற்கே தண்டபாணி ஆலயங்களிலும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.