சென்னை: பெண்களுக்கு கருப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்கூட்டியே அறிந்து அதைத் தவிர்ப்பதற்கான புதிய கண்டறியும் முறை ( கோல்போஸ்கோப்பி) தொடர்பான பயிற்சி சென்னையில் இளம் மகப்பேறு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது.
சமூக மகப்பேறியல் கழகமும் கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்தவமனையும் இணைந்து நடத்திய இந்த பயிலரங்கில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஎஸ். விஜய், டாக்டர் ரமணி ராஜேந்திரன், மருத்துவ கல்வித்துறை இயக்குநர் சி.வம்சதாரா ஆகியோர் பேசினர். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், இதில் சென்னையில் லட்சத்தில் 22 பேர் பாதிக்கப்படுவதாகவும், இந்த புதிய முறை சிகிச்சை எளிதானதாகவும் செலவு குறைவானதாக இருப்பதாகவும் மருத்துவ கல்லூரிகளிலும் சில மாவட்ட மருத்துவ மனைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் இந்த பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் எம்.மோகனாம்பாள் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் வி.கனகசபை இந்த பயலரங்கிற்குத் தலைமை வகித்தனர். 20 வயது முதல் 35 வரையான 40 பெண்களுக்கு இந்த பயிலரங்கில் கருப்பை புற்றுநோய் தொடர்பாக புதிய முறையில் பரிசோதிக்கப்பட்டனர்.