![]() |
Wednesday, February 2, 2011
குடல் புற்று நோயை கண்டுபிடிக்கும் நாய்கள்
தயிர் தொடர்ந்து சாப்பிட்டால்...
![]() |
முடி உதிர்வை தடுக்க...
![]() |
Tuesday, February 1, 2011
சுறுசுறுப்பாக இருந்தால் தூக்கம் வரும் தன்னாலே...
![]() |
ஒருவருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றால் தூக்கம் தொலைந்துபோகும் என்பார்கள். இது ஒருபுறம் இருக்க சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும் தூக்கம் வராது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பற்களை பாதுகாப்பது எப்படி?
![]() |
நம் அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம்.
கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
![]() |
மச்சம் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வுத் தகவல்
![]() |
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா?
![]() |
Monday, January 31, 2011
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா?
![Pills as Painkillers make us Deaf - Food Habits and Nutrition Guide in Tamil Pills as Painkillers make us Deaf - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/Painkiller26.jpg)
சிறுநீரகத்தில் வரும் சிக்கல்கள்!
![Health article on Urinary tract infection - Food Habits and Nutrition Guide in Tamil Health article on Urinary tract infection - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2010/dr.interview-567.jpg)
பனிக்காலத்தில் உடலை பாதுகாப்பது எப்படி?
![Protect yourself from Winter - Food Habits and Nutrition Guide in Tamil Protect yourself from Winter - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2010/winter-season23-575.jpg)
இதயத்தை பாதுகாக்க...
![Blocks in blood vessels - Food Habits and Nutrition Guide in Tamil Blocks in blood vessels - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2011/blood-vessels6-587.jpg)
கர்ப்பிணிகள் 'ஆல்கஹால்' கலந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது.....
![Consumption of alcoholic drugs during Pregnancy - Food Habits and Nutrition Guide in Tamil Consumption of alcoholic drugs during Pregnancy - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2011/pregnancy-women19-592.jpg)
ஒவ்வாமை: ஒரு பார்வை!
![Allergic Reaction Symptoms, Causes, Signs and Treatment - Food Habits and Nutrition Guide in Tamil Allergic Reaction Symptoms, Causes, Signs and Treatment - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2011/allergy11-588.jpg)
பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்!
![Risk factors of Ovarian Cancer in Women - Food Habits and Nutrition Guide in Tamil Risk factors of Ovarian Cancer in Women - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2011/dr.interview-596.jpg)
இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது?
![Why do Backs Pain? - Food Habits and Nutrition Guide in Tamil Why do Backs Pain? - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/Dhanurasanam24.jpg)
பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலியால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம். இதற்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருப்பினும்
கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
![]() |
கொசுத்தொல்லையிலிருந்து விடுபட: Anti Mosquito(புதிய மென்பொருள்)
![]() |
உற்சாகம் தேவையா? ஓய்வு அவசியம்!
![]() |
பெற்றோரிடம் பேசத் திணறும் பிள்ளைகள்
![]() |
Sunday, January 30, 2011
யு-ட்யூப் அபார வளர்ச்சி
சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர்.
குழந்தைகளுக்கும் அவசியம் உடற்பயிற்சி !
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, எல்லா துறைகளும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு, சம்பளம், சந்தர்ப்பங்கள், பொருளாதாரம் என, எதிலும் ஏற்றம் காணப்படுகிறது.
ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு....
![]() |
கால்களின் மூலம் ஒருவரின் மனதை அறியலாம்
சைக்கிளில் மொபைல் சார்ஜர்: நோக்கியா அறிமுகம்
![]() விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.![]() |
2011- ன் புத்தம் புதிய வரவுகள்!
![]() மேலும் சில சாதனங்களைத் தாங்கள் தயாரிக்கும் சாதனங்களில் இணைக்கவும் பலர் இந்தக் கண்காட்சியில் வட்டமிடுவார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை, வரும் ஆண்டில் நமக்குக் கம்ப்யூட்டர் சார்ந்து கிடைக்க இருப்பவை பற்றி இங்கு காணலாம். 1. கேம்ஸ் கம்ப்யூட்டர்: விளையாட்டை மையப்படுத்தி தனியே சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. Razer Switchblade என்ற பெயரில் 7 அங்குல அளவில் மல்ட்டி டச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுடன் கூடிய, நொட்புக்கினைக் காட்டிலும் சற்றுப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று தயாராகி விற்பனைக்கு வருகிறது. இதுவரை வெளியிடப்படாத ஆட்டம்(Atom) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம், 128 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க், வை-பி, 3ஜி எனப் பல புதிய வசதிகளைத் தரும் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நொட்புக் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் விலையில் இதனை எதிர்பார்க்கலாம். 2. ப்ராசசர்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஒரு சிப்பில் இணைத்துப் பதியப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் தரப்படும் விதம் மற்றும் இயக்கத்தில் அதிரடி மாற்றங்கள் வரலாம். இதனை SoC(System on Chip) என அழைக்கின்றனர். சிஸ்டம் சிப்பிலேயே தரப்படுவதால், கம்ப்யூட்டரின் பல பாகங்களுக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தகவல் பரிமாற்ற நேரம் முற்றிலுமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், கம்ப்யூட்டர் மிக அதிக வேகத்தில் இயங்கும். டேப்ளட் பிசிக்களுக்கு இது மிக உகந்ததாக இருக்கும். 3. மெமரி: இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் இருந்தன. சாம்சங் நிறுவனம் உலகின் முதல் DDR4 RAM சிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பலர் இன்னும் DDR2 RAM சிப்பினையே பயன்படுத்தி வருகிறோம். சாம்சங் வெளியிட்டுள்ள இந்த சிப்பில் 30 நானோ மீட்டர் சிப்கள் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 RAM சிப்பினைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த சிப்கள் இயங்குகின்றன. ஆனால் குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒரு விநாடியில் 2.133 கிகா பிட்ஸ் தகவல்களைப் பரிமாறுகின்றன. இதனை 4 கிகா பிட்ஸ் ஆக மாற்றித் தர முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது. 4. ஸ்டோரேஜ்: உங்களுக்கு வேடிக்கையான ஒரு சாதனம் வேண்டுமென்றால், லெக்ஸார் நிறுவனம் வழங்கும், சாதாரண பிளாஷ் ட்ரைவ் அளவு உள்ள Echo MX என்னும் ஸ்டோரேஜ் சாதனத்தைப் பார்க்கலாம். இதன் மெமரி அளவு 128 ஜிபி. விநாடிக்கு 32 எம்பி தகவல்களைப் பரிமாறுகிறது. 17 எம் பி அளவில் எழுதுகிறது. இது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினால், Victorinox Secure என்ற நிறுவனம் வழங்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்ட பிளாஷ் ட்ரைவினைக் காணலாம். இதன் கொள்ளளவு 256 ஜிபி. இது ஒரு ஸ்விஸ் ஆர்மி கத்தி போன்ற தோற்றத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் போதவில்லை என்றால், Rocstor என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 750 ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் புதியனவாகவும், அனைவரின் கவனத்தைக் கவர்வதாகவும் இருந்தாலும், ஒரு சாதனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. அது வெறும் கம்ப்யூட்டர் கேபின் தான். Zalmann நிறுவனம், ஜி.எஸ். 1200 என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் கேபின். இது ஏதோ சயின்ஸ் மூவியில் அறிமுகமாகும் சாதனம் போலத் தோற்றமளிக்கிறது. இதில் ப்ராசசர்களைக் குளிரவைக்க நான்கு மின்விசிறிகள், ஏழு ஹார்ட் டிஸ்க்கினை அமைக்க வசதி, மேலாக, எளிதாக அணுக நான்கு யு.எஸ்.பி. போர்ட், இ சடா (eSATA) சப்போர்ட், திரவம் பயன்படுத்தி கூலிங் செய்திட வசதி எனப் பல புதிய அம்சங்களைக் கொண்டதாக உள்ள இந்த கேபின் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இன்னும் பல புதிய சாதனங்கள், லாஸ்வேகாஸ் கண்காட்சியில் இடம் பெற்றன. |
அதிசயம்: 4 மாத குழந்தையின் வயிற்றில் கரு
![]() சோதனை செய்ததில், குழந்தைக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. முதலில் நீர்க்கட்டி என்றும் புற்றுநோய்க் கட்டி என்றும் மருத்துவர்கள் ஆய்வுசெய்தனர். அப்படி எதுவும் இல்லை என உறுதியானதும் அந்தக் கட்டியை அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவுசெய்தனர். அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அகற்றப்பட்ட கட்டியானது, 14 செமீ அகலத்துக்கு 12 செமீ உயரமாக இருந்தது. அது இன்னொரு கருவைப்போல இருந்தது. தண்டுவடம் தவிர கை விரல்கள், தலைமுடி ஆகியன அதில் இருந்தன. இந்தத் தாய்க்கு, இரட்டைக் கரு உருவாகி, அதில் ஒன்று உருவானவுடனேயே இன்னொரு கருவுக்குள் போய்விட்டது. ஐந்து லட்சத்தில் ஒன்றுதான் இதுபோல ஏற்படும் என்று அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்தார். |
மிகமிக வெப்பமான கிரகம்...
![]() விண்ணில் மிக வெப்பமான கிரகமாக இது கருதப்படுகிறது. இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷயரில் உள்ள கீலே பல்கலைகழக பேராசியர் அலெக்சிஸ் ஸ்மித் தலைமையிலான குழுவினர் இக்கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் டபிள்யூஏஎஸ்பி 33பி அல்லது எச்டி15082 என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2006 ம் ஆண்டிலேயே இக்கிரகம் இருப்பதை அறிவித்திருந்தனர். ஹேனரி தீவிலிருந்து வில்லியம் தொடர்ந்து இதை கண்காணித்து வந்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக வெப்பநிலையை உறுதி செய்துள்ளனர். இந்த கிரகமானது ஜீபிடர் கிரகத்தைப் போன்று 4 மடங்கு பெரியது. 380 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இது தன்னைத் தானே சுற்றி வர 29.5 மணி நேரம் ஆகிறது. |
இழந்த உறுப்புகளை மீண்டும் வளர்க்கலாம்!
![]() `பி21' என்று அந்த ஜீன்களுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்த ஜீன்கள் தான், ஹீலிங் முறையில் பாதிக்கப்பட்ட செல்கள் மறு உற்பத்தியாக காரணமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் தான் எலிகளின் உடலில் காயம்பட்ட தோல் பகுதி மீண்டும் வளர்கிறது. பல்லியினங்களிலும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் மறுபடியும் வளர்ந்துவிடுகிறது. எனவே இந்த ஜீன்களைக் கொண்டு தேய்ந்து போன மற்றும் பாதிக்கப்பட்ட பாகங்களை வளர வைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. மனிதனைப் பொருத்தவரையில் இது சில நேரங்களில் தான் சாத்தியமாகும். காயம்பட்ட இடங்களில் செல்களை மீண்டும் வளர வைக்க முடியும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. செயல்படாத பாகங்கள், தேய்ந்த பாகங்களை புதுப்பிக்கும் முறை இன்னும் அறியப்படவில்லை. எதிர்காலத்தில் பல்வேறு அதிசயிக்கத்தக்க மாற்றங்களை இந்த `பி21 ஜீன்கள்' மூலம் செய்துகாட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்கள் பென்சில்வேனியா நாட்டின் பிளேடில்பியா நகரில் உள்ள விஸ்டார் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள். |
செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளை கேன்சர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை
![]() கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. |
உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?
![]() இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள். ![]() மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம். மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ் இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும். |
மாதுளையின் மருத்துவ குணங்கள்
![]() புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது. மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. 2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்: மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். 3. ஆண்மை பெருக: மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. 4. கடுமையான இதய வலி நிற்க: மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும். 5. வயிற்றுப் புண்கள் குணமாக: மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும். 6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக: மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம். 7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க: மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். |
முகம் அழகு பெற...
![]() ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம். சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும். ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும். வறண்ட சருமத்திற்கு: வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது. முகம் பொலிவு பெற: தேன் – 1 ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன் இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும். எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு: இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான். எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும். இதற்கு நிரந்தரத் தீர்வு தேன் – 1 ஸ்பூன், முட்டை வெள்ளை கரு. இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும். எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும். மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கங்கள் மாறும். |
இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய...
![]() இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். ![]() மென்பொருளை தரவிறக்கம் செய்ய |
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆறு வழிகள்
![]() மாறாத அன்பு: எவ்வளவு வழிகளில் முடியுமோ, அவ்வளவு வழிகளிலும், எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறைகளும் `நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று உங்கள் துணையிடம் கூறுங்கள். இந்த வார்த்தைகள் உங்களவளின் உள்ளத்தை அசைப்பதாக இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கைப் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களை சுவையானதாக்கும். வேறுபட்ட சூழல்: இரண்டு வேறுபட்ட சூழலில் இருந்த இருவர் வாழ்க்கையின் பொருட்டு ஒன்று சேரும்போது அன்பு, காதலுக்கு இணையாகவே வாக்குவாதங்களும், சண்டைகளும் எட்டிப்பார்க்கும். இந்த மாதிரியான பிரச்சினைகள் கூட பலநேரங்களில் ஊடலில் இருந்து தான் தொடங்கும். பலநேரங்களில் அன்பின் ஆழத்தை அதிகரிக்கவேண்டிய இந்த ஊடலுக்குள் ஈகோ புகுந்து முரண்பாட்டை அதிகரித்து விடும். இந்த முரண்பாடுகளை கோபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துவதால் பாதிப்பு நேரலாம். விபரீதம் உணர்ந்து யாராவது ஒருவர் இறங்கி வர வேண்டும். கால மாற்றங்கள்: தம்பதியர் ஒருவர் மற்றவரை தரக்குறைவாக எடைபோடக்கூடாது. இவர் நம்மவர், இவள் நம்மவள் என்கிற உணர்வே இதயத்தின் ஆக்கிரமிப்பாக இருக்க வேண்டும். இந்த ஆக்கிரமிப்பு மட்டும் கண்மூடித்தனமாக இருந்தாலும் தப்பில்லை. வாழ்க்கை இனிக்குமே.தம்பதியருக்கு மனஅழுத்தம் பலவிதங்களில் வரலாம். நோய்கள், பணப்பிரச்சினை, தொழிலில் ஏற்றத்தாழ்வுகள், அண்டை அயலாருடன் மோதல், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் வரலாம். இப்படிப்பட்ட தம்பதியினருக்கு மோசமான எதிரி நம்பிக்கை இழப்பு. சந்தேகம் முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும். வலியுறுத்துங்கள்: கணவன் குடிகாரனாகவும், மனைவி குறை கூறுபவளாகவும் இருந்து விட்டால், பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மற்றவர்கள் இவர்களை சந்திக்கும் போது ஒருவர் மீதான குறையை மற்றவர் நாசூக்காக வெளிப்படுத்தலாம். இந்த மறைமுக வலியுறுத்தலுக்கு நாளானாலும் பலன் உண்டு. தொழிலை மதியுங்கள்: அடுத்தது தம்பதியருக்குள்ளான தொழில் மரியாதை. மனைவியின் வேலை மதிப்பு மிக்கதாக இல்லை என்று கணவன் உதாசீனம் செய்தால், அது அவளைக் கவலைப்படுத்தி விடும். அதே போல், மனைவி உயர்ந்த பதவியில் இருந்து கணவனை விட அதிகம் சம்பாதித்தால், அதனால் உண்டாகும் பொறாமை கணவனை அரித்து விடும். அவன் அவளைப் பலவழிகளில் காயப்படுத்துவான். அலுவலக பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வருவது இருவருக்கும் நல்லதல்ல. பிரச்சினையின் ஆழத்தை இரண்டு பேரின் பார்வையிலிருந்து பார்ப்பது எப்போதும் நல்லது. இரண்டு பக்கங்களிலுமே மாறுபட்ட கருத்துக்கள் எழலாம். ஆனால், வேற்றுமைகளை உடனே களைய வேண்டும். தாமதமானால், சமாதானம் ஏற்பட தொழில் முறை குடும்பநல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளலாம். |
நாம் ஏன் அதிர்ச்சி சம்பவங்களை மறப்பதில்லை?
![]() ஒரு சம்பவம் நீண்ட நாள் நினைவில் இருக்கிறதென்றால் அது அதிர்ச்சி தரும் சம்பவமாக இருக்க வேண்டும் அல்லது உள்ளத்து உணர்வுகளை எழுப்புவதாக இருக்க வேண்டும். அதனால்தான் நாம் விபத்துகளையும், மகிழ்ச்சியடன் கழித்த குழந்தைப் பருவ நினைவுகளையும் மறப்பதில்லை. இதற்குக் காரணம் உணர்வுப் பூர்வமான சம்பவங்களின் போது மூளையில் நரம்புத் தொடர்புகளை வலுப்படுத்தும் விதமாக நார் எப்பிநெஃப்ரின் என்ற கெமிக்கல் அதிகமாக உற்பத்தியாகிறது. இதை அசோக் ஹக்டே(பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகம்) என்பவர் ஆராய்ந்து தெரிவிக்கிறார். |
வோ்டில் கோடுகளுக்கான எண்கள்
![]() எப்போதும் பத்திகள், பிரிவுகள், பக்கங்கள் என்றே பார்க்கிறோம். ஆனால் வேர்ட் பக்க எண்கள் மற்றும் வரிகளைச் சுட்டிக் காட்டிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட பக்கம் மற்றும் வரிக்கு செல்லும் வசதி வேர்டில் தரப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டினைத் திறந்து எப்5 ஐ அழுத்துங்கள். Go To What என்ற பிரிவில் Line என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Enter Line Number என்பதில் செல்ல வேண்டிய வரி எண்ணை டைப் செய்திடவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கர்சர் அந்த வரிக்குச் செல்லும். இதில் இன்னொரு வசதியும் உள்ளது. உங்கள் கர்சர் உள்ள வரிக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ உள்ள வரிக்கு நீங்கள் செல்ல விரும்பலாம். எடுத்துக்காட்டாக கர்சர் உள்ள வரிக்கு பத்து வரிகள் பின்னால் செல்ல வேண்டும் எனில், Line என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், Enter Line Number என்பதில் +10 என டைப் செய்து, அடுத்து எணி கூணி என்பதில் கிளிக் செய்திடவும். கர்சர் பத்து வரி பின்னதாகச் செல்லும். முன்பகுதியில் 7 வரிகள் முன்னதாகச் செல்ல வேண்டும் எனில் –7 என அமைத்து கிளிக் செய்திடலாம். |
உங்கள் கணனியில் ஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்
![]() இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம். அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும். நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும். இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது. இந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். |
சில வகை காய்கறிகளின் மகத்துவங்கள்
![]() வெண்டைக்காய்: வெண்டைக்காயில் பி மற்றும் சி சத்துக்களும், உயிர்ச்சத்துக்களும் இருக்கின்றன. இதனை சமைக்கும் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு வெண்டைக்காய் நல்ல மருந்தாகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் மட்டும் வெண்டைக்காயை குறைவாக உண்பது நல்லது. கத்தரிக்காய்: இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றுதான். சுவையில் மட்டுமே கத்திரிக்காயில் மாற்றம் உண்டு. பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம் போன்ற பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்துகிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கத்திரிக்காய் நல்லது. அம்மை நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் கத்திரிக்காய்க்கு உண்டு. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். அதில்லாமல் ஏற்கனவே சரும வியாதி இருப்பவர்கள் கத்திரிக்காயை உண்பதால் வியாதி அதிகரிக்கும். நமைச்சல் உண்டாகும். முள்ளங்கி: வேர்ப்பகுதியில் உருவாகும் காய் முள்ளங்கியாகும். முள்ளங்கியில் ஏ சத்து அதிகம் இருப்பதால் கண் பார்வைக்கு அதிகம் உதவுகிறது. இதில் சோடியம் மற்றும் குளோரின் இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்தும். வயிற்று எரிச்சல், புளியேப்பம் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு. தீப்புண்களுக்கும் முள்ளங்கிச் சாறு மருந்தாகப் பயன்படும். மேலும் முள்ளங்கியில் கால்ஷியம், மாங்கனீஸ் கலந்துள்ளதால் பெண்களுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள், முள்ளங்கிச் சாற்றில் கற்கண்டு கலந்து குடித்து வந்தால் கரு நிலைக்கும். அவரைக்காய்: கொடியில் காய்க்கும் காயில் அவரைக்காய்க்கு முதலிடம் உண்டு. இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். புடலங்காய்: நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. மேலும், உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. பீட்ரூட்: பீட்ரூட் என்றதும் எல்லோருமே சொல்லிவிடுவார்கள், இது ரத்த விருத்திக்கு உதவும் என்று, அது மட்டுமல்ல பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கொத்தவரக்காய்: இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும். சுரைக்காய்: இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். |
தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்: பிரிட்டனில் கண்டுபிடிப்பு
உள்ளங்கையில் கீபோர்டு(KeyBoard)
![](http://www.z9tech.com/photos/thumbs/computer/skinput_001.jpg)
உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், "ஸ்டிக்கர்" வடிவ கீபோர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்" என்று பெயர்.
நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப்யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.
![](http://www.z9tech.com/photos/full/computer/skinput_003.jpg)
மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன்களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.
முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, சிப்பில் உள்ள பட்டனை நீங்கள் தட்டினால் போதும். என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் "டேப்ளட் பிசி(Tablet PC)"
![]() ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது. எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம். ![]() 1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. 2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது. தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன. 4. நிறைய எதிர்பார்ப்புகள்: இத்தனை மாடல் டேப்ளட் பிசிக்களும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், இவற்றில் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கும் எடுத்துச் செல்லுதல், நெட்வொர்க் இணைப்பு பெறுதல் ஆகிய ஸ்மார்ட்போன் வசதிகளுடன், லேப்டாப் ஒன்றின் செயல்பாடுகளையும் இணைத்துத் தருவதால், குறிப்பாக பெரிய திரை, அதிக திறனுடன் கூடிய ப்ராசசர் மற்றும் கேமரா மற்றும் துணை சாதனங்கள் கொண்டு இவை இருப்பதனால், பயன்படுத்துபவர்கள் இதில் இன்னும் பல வேலைகளை முடிக்கப் பயன்படுத்துமா என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் இணைய தகவல்களைத் தரும் பணிகளில், டேப்ளட் பிசிக்கள் தங்கள் ஜி.பி.எஸ். திறனுடன் செயல்படுவதால், இவற்றின் பயன்களின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மேலும் முன் பகுதியிலும் தரப்படும் கேமரா, வீடியோ கான்பரன்சிங் வசதியை மிக எளிதாகத் தருகிறது. இவை சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடனான தொடர்பை இன்னும் எளிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன. டேப்ளட் பிசிக்கள், தற்போது கையாளப்படும் மொபைல் கேமிங் வசதிகளை இன்னும் சிறப்பாக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கட் தளங்களில் ஹை டெபனிஷன் முப்பரிமாண விளையாட்டுக்கள் இதற்கெனவே குவிந்து கிடக்கின்றன. பலர் ஒரே நேரத்தில் வேறு வேறான இடங்களிலிருந்தவாறே விளையாடுவது டேப்ளட் பிசிக்கள் மூலம் மிக எளிதாகும். குறைந்த கட்டணத்தில், எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும் வகையிலான கம்ப்யூட்டர்களை, டேப்ளட் பிசிக்கள் தரும். பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், வை-பி மற்றும் 3ஜி தொடர்பினைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுவதால், நெட்வொர்க் இணைப்பு எளிதாகும். ஆப்பிள், சாம்சங். எச்.பி. போன்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களுடன், டெல், ஏசர் நிறுவனங்களின் டேப்ளட்களும் தற்போது மார்க்கட்டில் இறங்குகின்றன. இதில் நெட்புக் கம்ப்யூட்டர் விற்பனையில், உலக அளவில் 36% பங்கினைக் கொண்டுள்ள ஏசர் நிறுவனம் , 4.8 மற்றும் 10 அங்குல திரைகளுடன் இவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதே வகையில் டெல் நிறுவனமும் இறங்கியுள்ளது. பெயர் பெற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசியின் விலை ரூ.32,000 முதல் ரூ. 40,000 வரை செல்கிறது. அதிகம் பிரபலமாகாத சீனத்து டேப்ளட் பிசிக்கள், இணைய தளம் மூலமாகவும் சில ஏஜன்சிகள் மூலமாகவும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 9,000 முதல் ரூ.24,000 வரை உள்ளன. பெங்களூரைச் சேர்ந்த நோஷன் இன்க் (Notion Inc) என்ற நிறுவனம், ஐ-பேடில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட டேப்ளட் பிசி ஒன்றை ரூ. 20,000 என்ற அளவில் தருவதாக அறிவித்துள்ளது. இதே போல ஆலிவ் பேட் என்ற 3ஜி வசதி கொண்ட 7 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசி ரூ. 22,000க்குக் கிடைக்கிறது. இவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், நிச்சயம் இந்த சந்தையில் வெற்றி பெறும். முதல் வெற்றி பெற்றால், லாபமும் அடையும். மக்களும் பயன் பெறுவார்கள். பெரிய நிறுவனங்கள், இந்த டேப்ளட் பிசிக்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை அதிக அளவில் சந்தையைப் பிடிக்கும் போட்டியில் இனி பலமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், டேப்ளட் பிசி ஒருவரின் இரண்டாவது கம்ப்யூட்டராகத்தான் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பெரும்பான்மை யானவர்களால் இயக்கப்படும் விண்டோஸ் இயக்கம் முழுமையாக, டேப்ளட் பிசியில் இயங்கும் நிலை வரும்போதுதான், டேப்ளட் பிசிக்கள் பெரிய அளவில் பெருகும் |
யூடியூப் வீடியோவை பார்வையிட்டவாறே நண்பருடன் சோ்ந்து அரட்டை அடிப்பதற்கு
இணையத்தில் யூடியூப் வீடியோ ஒன்றை நண்பருடன் சேர்ந்து பார்வையிட வேண்டுமெனில் நாம் செய்வது என்னவென்றால், அதன் முகவரியை கொடுத்து பார்வையிடச் சொல்வோம்.
ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் பார்வையிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த surf2gether என்ற இணையத்தளம் தரும் சேவையை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் இருவருக்கும் வீடியோ ஒரே மாதிரி ஒளிபரப்பபடுவதுடன், அந்த வீடியோவைப்பற்றிய கருத்துக்களையும் சாட் ரூமில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று புதிய வீடியோவை பார்வையிடுவதற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பெயரை மட்டும் கொடுத்துவிட்டு நண்பரை இணையுமாறு அதன் முகவரியை வழங்கி அழைத்தால் அவரும் இணைந்தவுடன் வீடியோவைப்ப் பார்வையிடலாம்.
வலப்பக்கதில் சாட் செய்து கொள்ளவும் முடியும். குழுவினராக இணைந்துகொள்ளவும் முடிகிறது.
சாட்டில் இருக்கும் ஒருவர் வேறு வீடியோவை தேர்வு செய்தால் அனைவரும் அதையே பார்வையிடவும் முடியும்.
இணையதள முகவரி
![](http://www.z9tech.com/photos/thumbs/internet/surf2gether_001.jpg)
இதன் மூலம் இருவருக்கும் வீடியோ ஒரே மாதிரி ஒளிபரப்பபடுவதுடன், அந்த வீடியோவைப்பற்றிய கருத்துக்களையும் சாட் ரூமில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று புதிய வீடியோவை பார்வையிடுவதற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பெயரை மட்டும் கொடுத்துவிட்டு நண்பரை இணையுமாறு அதன் முகவரியை வழங்கி அழைத்தால் அவரும் இணைந்தவுடன் வீடியோவைப்ப் பார்வையிடலாம்.
வலப்பக்கதில் சாட் செய்து கொள்ளவும் முடியும். குழுவினராக இணைந்துகொள்ளவும் முடிகிறது.
சாட்டில் இருக்கும் ஒருவர் வேறு வீடியோவை தேர்வு செய்தால் அனைவரும் அதையே பார்வையிடவும் முடியும்.
இணையதள முகவரி
முக எலும்புகளின் அமைப்பை வைத்து ஒருவரின் வயதை கண்டறிய முடியும்: ஆய்வுத் தகவல்
![](http://www.z9tech.com/photos/thumbs/science/face_001.jpg)
வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!
Subscribe to:
Posts (Atom)