உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது?: காலை உணவு, வயிற்றில் முக்கால் பங்கும், மதிய உணவு, வயிற்றில் அரை பங்கும், இரவு உணவு, வயிற்றில் கால் பங்கும் சாப்பிட்டால்,
உடல் எடை கூடாது. மற்ற பங்குக்கெல்லாம், தண்ணீர் குடிக்க வேண்டியது தான்!மருத்துவ டிப்ஸ்...
கண் சிவந்திருந்தால்...: சுத்தமான பன்னீர், சில துளி கண்களில் விட்டுக் கொண்டால், கண் சிவந்திருப்பதும், கண் எரிச்சலும் போய் விடும்.
- அலமு பாட்டி
பொழுது போகாத பொம்முகளே...
வீட்டு பணிப்பெண், பூக்காரம்மா, பால் வினியோகிப்பவர், செய்தித்தாள் போடுபவர் போன்ற ஏழை, எளியவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தை அறிந்து, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு உதவி செய்யலாம்; அதே போல், எல்.ஐ.சி., பாலிசி எடுப்பதற்கும் உதவலாம்.