உலகில் டி.வி. ஒரு அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. பொழுது போக்கு மற்றும் அறிவுப்பூர்வமான உலக செய்திகளை அறிய மிகவும் உதவிகரமாக உள்ளது.அதே நேரத்தில் டி.வி.யில் குழந்தைகள் பார்க்க முடியாத அளவு ஆபாச காட்சிகளும் இடம் பெறுகிறது.எனவே குழந்தைகளுடன் பார்க்கும்போது அந்த காட்சிகளை பெற்றோர் தடைசெய்ய படாதபாடு படுகின்றனர்.
அதே சமயம் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் சில ஆபாச காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதிய வழிவகையை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது ஆபாச காட்சிகளுடன் கூடிய டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதபடி செய்ய புதிய ரிமோட் கண்ட்ரோலை வடிவமைத்து தயாரித் துள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டெம்ப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மெக்டியல் காலன் தலைமையிலான விஞ்ஞானிகள் இதை தயாரித்துள்ளனர்.இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கவில்லை. சாதா ரணமாக ரிமோட் கண்ட் ரோலில் சிறிது மாற்றம் செய்து உள்ளனர். |