• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, February 7, 2011

    சூரியனின் முப்பரிணாம அமைப்பு


    முதன் முதலாக சூரியனின் முழு அமைப்பும் முப்பரிமாணத்தில் நாசாவால் படமாக்கப்பட்டுள்ளது.இரண்டு நாசா வானூர்திகள் சூரியனிலிருந்து 180 கோணத்தில் சூரியனுக்கு பின்னும் அதன் சுற்றுவட்டப் பாதைக்கு முன்புறமாகவும் நிலைப்படுத்தப்பட்டு சூரியனைப் படம் பிடித்துள்ளன. அவை ஸ்டீரியோ  என்ற வானூர்திகளாகும்.
    சூப்பர் சண்டே ஆன இன்று அப்படங்களை வெளியிட்டதன் மூலம் நாசா பெருமை தேடிக் கொண்டுள்ளது. சூரியனின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளை முழுமையாக காண உதவும் இப்படங்களால் விண்தட்பவெப்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முன்னேற்றத்தை காணக்கூடியதாக அமையலாம்.
    மேலும் இயந்திர மற்றும் மனிதர்களால் இயக்கப்படும் ஆராய்ச்சிப் பயணங்களுக்கும் மிக உதவிகரமானதாக அமையும். 2006 அக்டோபரில் துவக்கப்பட்ட இந்த ஸ்டீரியோ ஆராய்ச்சியானது, சூரியனின் சக்தி வெளியேற்றம், சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் ஆற்றல், போன்றவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும்.
    இந்த ஆய்வுப் பயணம் 2007இல் சூரியனின் முப்பரிமாணத் தோற்றத்தை படம்பிடித்தது. 2009 இல் இந்த இரு விண்கலங்களும் சூரியனின் முப்பரிமாணத்திலிருந்து வெளியேறும் பொருட்களின் நிறைகளின் வெளியேற்றம், எவ்வாறு தகவல் தொலைத்தொடர்பு, கப்பல்களின் இயக்கம்,செயற்கைக் கோள் இயக்கம் மற்றும் பூமியிலுள்ள ஆற்றல் மையங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அறிய உதவும்.
    இந்த ஸ்டீரியோ அமைப்பு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அறிவியல் அமைப்புகளினால் வடிவமைக்கப்பட்டது. டெலிகிராப் நாளேட்டிற்கு இங்கிலாந்தின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கலாநிதி கிறிஸ் டேவிஸ் தெரிவித்ததாவது,  ஸ்டீரியோ ஆய்வுகள் ஏற்கெனவே பல அழகிய காட்சிகளையும், விண் கற்களிலிருந்து வரும் சூரிய வெடிப்புகள் பற்றியும், அறிய உதவுகின்றது.
    கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்த கலாநிதி றிச்சர்ட் ஹரிசன், “எல்லோரும் நினைப்பது போன்று சூரியன் அழகிய மஞ்சள் நிற அமைப்பைக் கொண்டதல்ல, சூரியனின் மேற்புற அமைப்புத் தொடர்பான படங்கள் மூலம் அதன் பல பரிணாமங்களையும் அறியலாம்” என்று தெரிவித்துள்ளார்.