• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, February 7, 2011

    ஆரோக்கியம் தரும் துளசித் தேநீர்


    துள‌சி‌யை எ‌ந்த முறை‌யி‌ல் உ‌ட்கொ‌ண்டா‌லு‌ம் அது உட‌லி‌ன் ஆரோ‌க்‌‌கிய‌த்தை‌க் கா‌க்‌கிறது.
    ச‌க்‌தியை அ‌ளி‌க்‌கிறது. நோயை எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோயை குண‌ப்படு‌த்து‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோ‌யி‌ல் இரு‌‌ந்து கா‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம் து‌ள‌சி‌த் தே‌நீ‌ர் தரு‌கிறது.
    து‌ளி‌சி‌யை‌க் கொ‌‌ண்டு தே‌நீ‌ர் தயா‌ரி‌த்து‌க் குடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் பலரு‌க்கு‌ம் உ‌ண்டு. இ‌ந்த துள‌சித் தே‌நீ‌ர் வெறு‌ம் உ‌‌ற்சாக‌த்‌தையு‌ம், ந‌ல்ல வாசனையையு‌ம் ம‌ட்டு‌ம் அ‌ளி‌க்கவி‌ல்லை. உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம், நோ‌யி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவத‌ற்கான ச‌க்‌தியையு‌ம் அ‌ளி‌க்‌கிறது.
    துள‌சி இலைகளை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி எடு‌த்து அவ‌ற்றை ‌நீ‌ங்க‌ள் போடு‌ம் தே‌நீ‌ரி‌‌ல் கூட சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது கடை‌க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌க்‌ரீ‌ன் டீ போ‌ன்றவ‌ற்‌றி‌ல் துள‌சி சே‌ர்‌த்ததை வா‌ங்‌கி வ‌ந்து அரு‌ந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
    துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி துளசி கஷாயத்தைக் கொடுத்தால் போதும்.