• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 17, 2011

    ஜிமெயில் கணக்கின் மூலம் பல கணக்குகளை கையாள

    ஈமெயில் சேவையில் உச்சத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய ஈமெயில் சேவையில் புதுப்புது வசதிகளை புகுத்தி வருகிறது.அந்த வகையில் இந்நிறுவனம் அளிக்கும் வசதி தான் ஒரே ஈமெயில் கணக்கை பயன்படுத்தி பல ஈமெயில் முகவரிகளை உள்ளினைத்து, புகுத்தப்பட்ட ஈமெயில் கணக்கை பயன்படுத்தி அதிலிருந்து ஈமெயில்களை அனுப்பி கொள்ள முடியும்.
    சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் From அட்ரஸ்யை மாற்றிக் கொள்ளும் வசதி ஆகும். இந்த வசதியை உள்ளினைக்க முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும்.
    அதன் பின் Settings பொத்தானை அழுத்தி Accounts and Import என்னும் பட்டியை கிளிக் செய்யவும். அதில் send mail as என்னும் பகுதியில் Send mail from another address என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்.
    Name என்னும் பாக்சில் உங்களுடைய பெயரை உள்ளிடவும். அடுத்த பாக்சில் உங்களுடைய ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Next Step பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Send Verification என்னும் பொத்தானை அழுத்தவும்.
    அடுத்ததாக உள்ளிட்ட ஈமெயில் கணக்கில் நுழைந்து Verification கோடினை காப்பி செய்து தோன்றும் விண்டோவில் உள்ளிட்டவும். இல்லையெனில் Verification லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.
    Compose mail பட்டியை அழுத்தவும். இப்போது From அட்ரஸ் டேப் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி ஈமெயில் அனுப்பி கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பல ஈமெயில் முகவரிகளை இணைத்துக் கொள்ள முடியும்.