மருத்துவ அறிவியல், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. ஆனாலும் எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றிடம் இந்த முன்னேற்றம் எடுபடவில்லை.மனித குலத்தை புற்றுநோய் எப்படி தாக்க ஆரம்பித்தது என்பது தொடர்பாக அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் இருந்திருக்கிறது என்ற தகவல் ஆய்வில் தெரியவந்தது.
இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது: புற்றுநோய் மனிதகுலத்தை தாக்கும் முன்பே விலங்குகளை தாக்கியிருக்கிறது. ஒரு செல் உயிரினங்களில் தொடங்கி படிப்படியாக விலங்குகளை தாக்கி வந்துள்ளன. விலங்குகளிடம் முதலில் சிறிய கட்டி போல உருவாகி பின்னர் அது ஆறாமல் நாள்பட்டு கிருமிகள் பெருகி புற்றுநோயாக மாறியுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த மனித, விலங்கு எலும்புகளை டி.என்.ஏ ஆய்வுகள் நடத்தியதில் இருந்து இது தெரிய வந்துள்ளது. ஜீன் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடு உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிக்கிறது.
எதிர்ப்பு சக்தி ஓரளவுக்கு மேல் குறைந்தால் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. புற்றுநோய் கிருமிகள் வேகமாக பரவி உயிரையே பறிக்கும் அளவுக்கு தீவிரமாக மாறுகிறது. |