மன அழுத்தங்களைக் குறைக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகளின் செயற்பாட்டை சாதாரண வலி நிவாரணி மாத்திரைகள் குறைக்கின்றன.புரொஸக் மற்றும் அது போன்ற வகையைச் சார்ந்த சந்தோஷ மாத்திரைகள், பிரிட்டனில் வருடாந்தம் இருபது லட்சம் பேருக்கு சிபார்சு செய்யப்படுகின்றன.
ஆனால் இவற்றைப் பாவிக்கும் பலர் இந்த மாத்திரைகள் தமக்கு போதிய பலனையோ அல்லது எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியையோ தரவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்தே இதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தேடினர். ஆய்வாளரும், பேராசிரியருமான எர்விங் கேர்ஸ்ச் தலைமையிலான குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது. மிகக் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளானவர்களுக்கு மட்டுமே புரொஸக் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
எஸ்பிரின், பெரஸிடமோல் உட்பட சாதாரண வலி நிவாரணிகள் இந்த மாத்திரைகளின் தாக்கங்களைக் குறைத்து விடுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இருந்தாலும் இதற்கான காரணம் இன்னும் சரியாக உணரப்படவில்லை. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் மாத்திரைப் பழக்கங்களை வைத்தே இந்த முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
மேலும் மிருகங்களுக்கு அத்தகைய மாத்திரைகள் வழங்கப்பட்டு அவற்றின் மாற்றங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன. |