உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 1980 ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை" என அழைக்கப்படுகிறது. இவை இதற்கு முன்பு பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளை விட ஆபத்தானது. இது ரத்தத்தை உறைய செய்யக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் 2 ஆய்வுகள் நடத்தினர். அதில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
ரத்தம் உறைவதால் சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் தான் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். |