• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, January 27, 2011

    எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை


    நாள்தோறும் சமையலில் எண்ணெய்க்குப் பதிலாக தண்ணீரைப் பயன்படுத்தலாம் என இதயநோய் நிபுணரும், சேவோல் சுகாதார ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் "பிமல் சாஜ்ஜர்" கூறினார்.
    இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    1992-ம் ஆண்டில் 1.6  கோடியாக இருந்த இதய நோயாளிகள் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 10 கோடியாக உயர்ந்துள்ளது. இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    உணவுத் திட்டம், உடற்பயிற்சி, மனஅழுத்த மேம்பாடு, யோகா (தினமும் 35 நிமிடம்), நடைப்பயிற்சி ஆகிய 5 முறைகளையும் தினமும் பின்பற்றினால் இதய பாதிப்பை குறைத்துவிடலாம் மற்றும் அறிவியல் மற்றும் வாழும் கலையை இணைத்த செயல்பாடுகளின் மூலம் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்.
    இதயத்தில் சிறிய அளவில் ஏற்படும் அடைப்புகள், பலஆண்டுகள் கழித்து பெரிதாகி வெடித்துவிடும். அவ்வாறு வெடித்து விட்டால் அந்த அடைப்புகள் இருந்த பகுதி முழுவதும் செயலிழந்துவிடும். இந்த அடைப்புகளுக்கு முக்கிய காரணம் ரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு படிவதே. அதிகக் கொழுப்புப் படிவதற்கு சமையலில் உபயோகப்படுத்தும் எண்ணெய்தான் காரணம்.
    இதனால் தினமும் சமையலுக்கு எண்ணெயை பயன்படுத்தாமல் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதாவது காய்கறிகள், கிழங்கு, பயறு வகைகளை தண்ணீரில் வேக வைத்து, அதற்குத் தேவையான மசாலாவை வாணலியில் போட்டு (எண்ணெய் இல்லாமல்) வதக்க வேண்டும். வாணலியில் மசாலா அடி பிடித்தால், சிறிது தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும். இதுதான் எண்ணெய் இல்லாத சமையலின் அடிப்படைத் தத்துவம்.
    இதயத்தில் உள்ள அடைப்பை நீக்க பின்வரும் முறைகளை பின்பற்றலாம்.
    1. காற்றுப் பைகள் மூலம் ரத்தத்தை வேகமாக செலுத்துவதன் மூலம் ரத்தத்தில் உள்ள அடைப்புகளை நீக்க முடியும்.
    2. ஊசியின் மூலம் வேதிப் பொருளை செலுத்துவதன் மூலம் இதயத்தில் உள்ள அடைப்புகளைக் கரைக்க முடியும். இந்த இரண்டு முறைகளையும் 80 சதவீத பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு செய்தால் போதும்.
    குறைவான பாதிப்பு உள்ளவர்கள் முதலில் கூறிய 5 முறைகளை பின்பற்றினால் இதயத்தில் உள்ள அடைப்புகள் கரைந்து போய்விடும். இதனால் இதய நோயாளிகளில் 95 சதவீதத்தினருக்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படாது. ஆனால் மருத்துவமனைகள் இதனை நோயாளிகளுக்கு அறிவுறுத்தத் தவறுகிறது. அறுவைச்சிகிச்சை இல்லாமல் பாதிப்பு குணமடைந்தால் ரூ. 5000 கோடியை சேமிக்க முடியும் என்றார்.