![]() மாத்திரை சாப்பிடுவது, ஊசி போட்டுக்கொள்வது, ஆவி பிடிப்பது என்று ஜலதோஷத்தை விரட்ட ஒரு போராட்டமே நடத்துகிறோம். ஆனால் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்களோ, இது சாதாரண விஷயம் என்று கூறுகிறார்கள். ஜலதோஷம் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலே போதுமாம். தும்மலும் வராது. அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு தகுந்த நிவாரணமும் பெறலாம் என்கிறார்கள். அதேநேரம், தினமும் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவோர்க்கு ஜலதோஷம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். |