![]() "நாணம் மிகுந்த பெண்கள் தங்கள் நளினத்தில் தான் காதலைச் சொல்வார்கள்" என்கிறார்கள் உடல்மொழி(BodyLanguage) நிபுணர்கள். காதல் மொழி தெரியாதவர்கள் தான் "இவள் என்னை விரும்புகிறாளா? இல்லையா? என்று புரியவில்லை, பெண்களே இப்படித்தானோ?" என்று சிரித்து விட்டு போய் விடுவார்கள். அப்படிபட்டவர்கள் இந்த காதல் மொழியை தெரிந்து கொள்ளுங்கள். * நீங்கள் ஒருவரை விரும்பினீர்கள் என்றால், அவரை சிறிது கவனித்தாலே அவரின் மன எண்ணங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் உங்களை பார்ப்பதாக நீங்கள் உணர்ந்தால் அது `அவருக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்பதற்கான முதல் அறிகுறி. * நீங்கள் அவரை பார்க்கும்போது, உங்கள் பார்வையை கண்டுகொள்ளாமல் தரையை நோக்கி வெட்கத்துடன் குனிந்து கொண்டால் அது விருப்பம் சார்ந்த வெளிப்பாடு. அவரும் உங்களுக்கு ஈடுகொடுத்து பார்த்தால் இயல்பான உணர்வு. ஏதோ காரியம் விஷயமாக உங்களிடம் தொடர்பு கொள்ள இருக்கிறார் என்று பொருள். உங்களைக் கவனிக்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டோ, அல்லது மற்றவர்களுடன் பேசுவதிலோ கவனத்தை செலுத்தி இருந்தால் அவருக்கு இன்னும் உங்கள் மேல் விருப்பம் வரவில்லை என்று அர்த்தம். * நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தால் உங்கள் கண்பார்வை வழக்கத்தைவிட அகலமாக விரியும். அது கிளர்ச்சியும், உற்சாகமும் காட்டும். அவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இதுபோன்ற மாற்றங்கள் அவரிடமும் தென்பட்டால் உங்கள் காதலுக்கு `ஓ.கே.’ என்று அர்த்தம். * ஒருவரது உணர்வுகளைக் காட்டும் மிகச்சிறந்த அடையாளம் குரல். எனவே காதலர்கள், தாங்கள் விரும்புபவர்களின் குரலைக் கவனிப்பதன் மூலம் காதலை எளிதாக உணர்ந்து கொள்ளலாம். நீங்கள் விரும்புபவர் உங்களை நேசிப்பதாக இருந்தால் அவர் உங்கள் பேச்சைக் கவனிப்பார். உங்கள் பேச்சு எந்த இடத்தில் மாறுகிறது என்பதையும் உற்றுக் கவனிப்பார். * அவர் உங்களை மிகவும் விரும்பவராக இருந்தால் உங்கள் சாயலில் பேச முயலுவார். நீங்கள் எந்தெந்த இடங்களில் ஏற்ற இறக்கங்களை பின்பற்றுவீர்கள், அடிக்கடி எந்த வார்த்தையை உபயோகிப்பீர்கள் என்பதை கவனித்து அதே வழக்கத்தில் பேசி மகிழ்வார். |