நாம் எப்போதும் இணைய இணைப்பிலேயே இருப்போம் என சொல்ல முடியாது. அவசர வேலையாக வெளியில் செல்ல நேரிடலாம். இரண்டு நாள் அல்லது அதற்கு மேலும் வெளியூர் செல்ல நேரிடலாம்.அதுபோன்ற சமயங்களில் நமக்கு வரும் இமெயில் கடிதங்களுக்கு ரெடிமேட் பதில்களை அனுப்புமாறு ஜிமெயிலில் செட் செய்திடலாம்.
இந்த செட்டிங்கை நாம் செய்து விட்டவுடன் மற்றவர்கள் நமக்கு மெயில் அனுப்பினால் அவர்களுக்கு நாம் ரெடி செய்து வைத்துள்ள தகவல் உடனே சென்று சேரும்.
நாம் நமது மெயிலை ஓப்பன் செய்து பார்க்கும் வரையில் ஒருவரே நமக்கு தொடர்ந்து அதே மெயில் முகவரியில் மெயில் அனுப்பி கொண்டிருந்தால் முதலில் நாம் தயார் செய்த பதில் சென்று சேரும்.
அடுத்த ரெடிமேட் பதில் மீண்டும் நான்கு நாட்களுக்கு பிறகே சென்று சேரும். அதே நபர் வேறு மெயில் முகவரியில் மெயில் அனுப்பினால் அவருக்கு ரெடிமேட் பதில் சென்று சேரும். இந்த செட்டிங் எல்லாம் நாம் மெயில் திறந்து பார்க்கும் வரை தான். மீண்டும் நாம் மெயில் விட்டு வெளியேறுகையில் விருப்பப்பட்டால் செட்டிங்கை சேவ் செய்து விட்டு செல்லலாம்.
இதற்கு உங்கள் ஜிமெயிலை திறந்து கொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து வரும் விண்டோவில் General கிளிக் செய்யுங்கள். அதில் Out of Office AutoReply on எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து அதில் உள்ள Subject மற்றும் Message -ல் விரும்பிய வார்த்தைகளை தட்டச்சு செய்து இறுதியில் Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள். |