• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 10, 2011

    காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

    காரில் இருந்து வெளியாகும் புகை மற்றும் தூசியால் மூளை நோய் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.பொதுவாக காற்று, நீர் போன்றவற்றில் ஏற்படும் மாசுவினால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே மாசு கட்டுப்பாடு அவசியம் என கருதப்படுகிறது.
    இந்த நிலையில் காரில் இருந்து வெளியாகும் புகை கழிவு மற்றும் ரோடுகளில் பறந்து திரியும் தூசி கழிவுகளால் மூளை பாதிக்கப்படுகிறது. அதன் மூலம் ஞாபகமறதி, அல்ஷமீர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
    இந்த தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி காலெப் பிஞ்ச் தலைமையிலான நிபுணர்கள் எலிகளின் மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
    காரில் செல்லும் போது வெளியாகும் புகை மற்றும் காற்றில் பறக்கும் துசியை விட ஆயிரம் மடங்கு மிக நுன்னிய தூசி துகள்கள் சுவாசத்தின் மூலம் எலிகளின் மூளையை தாக்கின.
    இது போன்று பல நாள் சம்பவத்துக்கு பின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு நோய் உருவானது. இதே போன்று தான் மனித உடலிலும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.