• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 10, 2011

    காபி குடிக்கும் பழக்கம் தீவிரமடைவதற்கு மரபணுவே காரணம்

    பாரம்பரிய மரபணு தாக்கம் காரணமாக ஒரு நபருக்கு காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் தீவிரமாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.சிலருக்கு சாக்லெட் சார்ந்த பொருட்கள் ஒத்துக் கொள்ளாத நிலை இருக்கும், இதற்கும் காபி பழக்கத்திற்கு காரணமாக இருக்கும் மரபணுக்களே காரணமாக உள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
    டி.என்.ஏ மரபணு மற்றும் உணவு பழக்க வழக்கம் குறித்து 45 ஆயிரம் மக்களிடம் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மரபணுவுக்கும் காபி அதிகமாக விரும்பும் நபர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது.
    காபி மற்றும் டீ யை அதிகம் குடிப்பதற்கு சி.ஒய்.பி1 ஏ2 மற்றும் ஏ.எச்.ஆர் ஆகிய மரபணுக்கள் முக்கிய காரணமாக உள்ளன. புதிய தொழில்நுட்ப முறையில் மரபணு மாற்ற வேறுபாடுகளால் ஏற்படும் காபி, டீ குடிக்கும் பழக்கம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டும் உள்ளது.
    பிரிட்டனில் தினமும் 7 கோடி கோப்பை காபியும், 16½ கோடி கோப்பை டீயும் தினமும் மக்களால் அருந்தப்படுகிறது.