கரியமில வாயு வெளியேற்றத்தால் மனிதர்களுக்கு அலர்ஜி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.ஐரோப்பியாவின் 13 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 20 இன மரம் மற்றும் தாவரங்களின் மகரந்தத் துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள்.
இந்த ஆராய்ச்சியின் போது கரியமில வாயு சுற்றுப் பகுதிகளில் அதிகரித்திருப்பதால் அலர்ஜி, காய்ச்சல் போன்றவை ஏற்படுவது தெரிய வந்தது. இந்த ஆய்வாளர்களின் அறிக்கை ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றிய ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த தூசி அலர்ஜியை கட்டுப்படுத்த நகர நிர்வாகத்தினர் மரங்களை அதிகம் நடுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
இந்த வெப்பநிலை தாவரங்கள் அதிக அளவு மகரந்தத் துகள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த துகள்கள் அதிகரிப்பால் மனிதர்களுக்கு அலர்ஜி, காய்ச்சல் ஏற்படுவது அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அலர்ஜி, காய்ச்சல் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது என பிரிட்டன் பொது சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. |