• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, March 28, 2011

    அழகுக்கு தங்கச் சிகிச்சை

    பளிச்'' என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.
    இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    அந்த முயற்சியின் விளைவாக புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் `தங்க பேஷியல்'. (Gold Facial)
    லண்டனைச் சேர்ந்த `பெரா' என்ற பெண்மணிதான் தங்க பேஷியலின் நாயகி. 30 ஆண்டு முயற்சியின் பலனாக `தங்க பேஷியலில்' வெற்றி கண்டிருக்கிறார். அழகு ஆபரணமான தங்கத்தை `ஆலிகோ செல்லுலார் கோல்டு' என்னும் திரவத் தங்கமாக மாற்றி, நவீன தொழில்நுட்ப முறையில் பேஷியல் சிகிச்சை அளிக்கிறார்.
    முதலில் ஆவிக்குளியல் மூலம் ஓரளவுக்கு வியர்வை துளைகளை சுத்தம் செய்துவிட்டு திரவத்தங்கத்தை முகத்தில் பூசி, ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கம் சருமத்தை ஊடுருவிச் சென்று வியர்வைத்துளைகளை முழுதும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் மேனி பளபளப்பை பெறுகிறது.
    "மற்ற பேஷியல் முறைகளைப்போல சில மணி நேரங்களில் முடிந்துவிடாது இந்த தங்க பேஷியல். சில வாரங்களுக்கு படிப்படியான சிகிச்சைக்குப் பிறகு நிச்சயம் பொலிவான முகஅழகைப் பெறலாம்'' என்று நம்பிக்கைïட்டுகிறார் பெரா.