'முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது’ என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர், 'தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை’ என தெரிவித்தனர்.
முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை.
குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. |