• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, March 28, 2011

    கூகுள் பாணியில் லோகோ உருவாக்க வேண்டுமா?

    இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். இணையத்தில் ஜாம்பவனாக உள்ள கூகுள் பாணியில் நமக்கு வேண்டிய லோகோவை உருவாக்கலாம்.இதுக்காக போட்டோஷாப் போன்ற எடிட் மென்பொருள்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரை உருவாக்கி கொள்ளலாம்.
    இந்த பணியை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது.  கீழே உள்ள இணையதள முகவரிக்கு செல்லவும்.
    இந்த தளம் சென்றவுடன் ஒரு விண்டோ தோன்றும். ENTER YOUR NAME என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து விடவும். அடுத்து அருகில் உள்ள CREATE MY SEARCH PAGE என்ற பட்டனை அழுத்தவும்.
    அடுத்து உங்களுக்கு வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் பாணியில் வந்திருக்கும். அதன் மீது மவுசில் வலது க்ளிக் செய்து SAVE IMAGE AS என்பதை தேர்வு செய்து உங்கள் கணணியில் சேமித்து கொள்ளுங்கள்.
    இதில் நீங்கள் சேமிக்கும் பொது ஒவ்வொரு எழுத்தாக தான் சேமிக்க முடியும். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் Goglogo செல்லவும்.