• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, January 30, 2011

    வோ்டில் கோடுகளுக்கான எண்கள்

    வேர்ட் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், அதன் வரிகளுக்கு எண்களை அமைக்க முடியும். அவ்வாறு அமைக்காவிட்டாலும் வேர்ட் ஆவணத்தின் வரி எண்களைக் கீழாகக் காட்டும்.பக்க எண், பிரிவு எண், மொத்தப் பக்கத்தில் கர்சர் இருக்கும் பக்க எண், அடுத்து வரி எண், கேரக்டர் எண் என வரிசையாகக் காட்டப்படும். பலர் இந்த வரி எண்கள் குறித்து கவலைப்படுவதோ, பயன்படுத்துவதோ இல்லை.
    எப்போதும் பத்திகள், பிரிவுகள், பக்கங்கள் என்றே பார்க்கிறோம். ஆனால் வேர்ட் பக்க எண்கள் மற்றும் வரிகளைச் சுட்டிக் காட்டிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட பக்கம் மற்றும் வரிக்கு செல்லும் வசதி வேர்டில் தரப்பட்டுள்ளது.
    டாகுமெண்ட்டினைத் திறந்து எப்5 ஐ அழுத்துங்கள். Go To What என்ற பிரிவில் Line என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Enter Line Number என்பதில் செல்ல வேண்டிய வரி எண்ணை டைப் செய்திடவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கர்சர் அந்த வரிக்குச் செல்லும்.
    இதில் இன்னொரு வசதியும் உள்ளது. உங்கள் கர்சர் உள்ள வரிக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ உள்ள வரிக்கு நீங்கள் செல்ல விரும்பலாம். எடுத்துக்காட்டாக கர்சர் உள்ள வரிக்கு பத்து வரிகள் பின்னால் செல்ல வேண்டும் எனில், Line என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், Enter Line Number என்பதில் +10 என டைப் செய்து, அடுத்து எணி கூணி என்பதில் கிளிக் செய்திடவும்.
    கர்சர் பத்து வரி பின்னதாகச் செல்லும். முன்பகுதியில் 7 வரிகள் முன்னதாகச் செல்ல வேண்டும் எனில் –7 என அமைத்து கிளிக் செய்திடலாம்.