• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, January 31, 2011

    கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

    நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்.1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
    2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
    3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்.
    4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
    5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
    6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
    7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
    8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
    9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
    10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
    11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
    12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
    13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.