![]() `பி21' என்று அந்த ஜீன்களுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்த ஜீன்கள் தான், ஹீலிங் முறையில் பாதிக்கப்பட்ட செல்கள் மறு உற்பத்தியாக காரணமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் தான் எலிகளின் உடலில் காயம்பட்ட தோல் பகுதி மீண்டும் வளர்கிறது. பல்லியினங்களிலும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் மறுபடியும் வளர்ந்துவிடுகிறது. எனவே இந்த ஜீன்களைக் கொண்டு தேய்ந்து போன மற்றும் பாதிக்கப்பட்ட பாகங்களை வளர வைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. மனிதனைப் பொருத்தவரையில் இது சில நேரங்களில் தான் சாத்தியமாகும். காயம்பட்ட இடங்களில் செல்களை மீண்டும் வளர வைக்க முடியும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. செயல்படாத பாகங்கள், தேய்ந்த பாகங்களை புதுப்பிக்கும் முறை இன்னும் அறியப்படவில்லை. எதிர்காலத்தில் பல்வேறு அதிசயிக்கத்தக்க மாற்றங்களை இந்த `பி21 ஜீன்கள்' மூலம் செய்துகாட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்கள் பென்சில்வேனியா நாட்டின் பிளேடில்பியா நகரில் உள்ள விஸ்டார் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள். |