முக எலும்புகளின் அமைப்பை வைத்து ஒருவரின் வயதை கண்டறிய முடியும்: ஆய்வுத் தகவல்
ஒருவரை வயதானவர் என்பதை அறிய அவரது தோல் சுருக்கங்களே அடையாளம் காட்டி விடும். எனினும் தற்போது ஒருவரின் முகத்திலுள்ள எலும்புகளின் அமைப்பை வைத்தே அவரது வயதை கணக்கிட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இது குறித்து அறிவியலாளர்கள் பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்களை சி.டி. ஸ்கேன் கொண்டு சோதனை செய்துள்ளனர். அதில் ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுடைய முகத்தின் எலும்புகளின் கட்டமைப்பு மாறுபடுவதை அவர்கள் கண்டறிந்தனர்.மேலும் ரோசெஸ்டர் மருத்துவ பல்கலை கழகத்தில் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை பிரிவு கண்காணிப்பாளரான "ஹோவர்டு லேங்ஸ்டீன்" என்பவர் முகத்தில் உள்ள மென்மையான திசு படிப்படியாக குறைந்து விடுதல் மற்றும் முகத்தின் எலும்புகள் தனது இலகு தன்மையை இழந்து கடினமாக இருத்தல் ஆகியவை வயதை கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் விடயங்கள் என தன்னுடைய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.