![Health article on Urinary tract infection - Food Habits and Nutrition Guide in Tamil Health article on Urinary tract infection - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2010/dr.interview-567.jpg)
சிறுநீரக செயலிழப்பு என்பது நமது உடலிலுள்ள சிறுநீரகங்கள் தமது பணிபுரியும் திறனை முற்றிலும் இழக்கும் நிலையாகும். இந்த நோய்க்கு ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் தோன்றுவதில்லை. ஆனால் நோய் முற்றிய பிறகு கீழ்கண்ட மாறுதல்கள் தோன்றக்கூடும்.
ரத்தத்தில் யூரியா எனும் கழிவுப் பொருள் மிக அதிகமாகிறது. ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு யூரியா 20-40 மில்லி கிராம் வரை இருக்கும். ஆனால் சிறுநீரகம் முற்றிலும் திறனிழந்து விடும்போது இது மிகவும் அதிகமாகி விடுகிறது. இதனால் சிறுநீர் பெரும் அளவு போகும். ஆனால் இது வெறும் நீராகவே இருக்கும். அதில் எந்தவிதமான கழிவுப் பொருட்களும் இருக்காது. இதனால் ரத்தசோகை ஏற்படும். ரத்தத்தில் சுண்ணாம்புச் சத்து குறையும்போது எலும்புகள் பலவீனமடைந்து தானாகவே முறியக்கூடும். இறுதிக் கட்டத்தில் நோயாளி பேசவோ, நடமாடவோ கூட வலுவின்றி ஆழ்ந்த மயக்க நிலையை அடையலாம். சில சமயம் கை, கால் வலிப்பு ஏற்படலாம். நாக்கு வறண்டு மூச்சுக் காற்று சிறுநீர் போல் துர்நாற்றம் வீசக்கூடும். தொடர்ந்து வயிற்றுப்புரட்டல், வாந்தி, பசியின்மை, விக்கல் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு அதில் ரத்தப் போக்கும் ஏற்படலாம். தோலில் வறட்சி ஏற்பட்டு தாங்க முடியாத அரிப்பு ஏற்டபலாம். இந்த நிலையை அடைய விடக்கூடாது. அதற்கு முன்பாக கண்டிப்பாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். இதற்கு ஹோமியோபதியில் அருமையான மருந்துகள் உள்ளன.
சிறுநீர்ப் பாதையில் கற்கள்:
சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானவை உணவில் வைட்டமின் 'ஏ' சத்து இருத்தல், சிறுநீர்ப் பாதையில் தொடர்ந்து ஏற்படும் நுண்கிருமி தாக்கம், கோடை காலத்தில் சிறுநீர் மிகவும் அடர்ந்த கரைசலாக வெளியாதல், சிறுநீர் பை முழுவதும் காலியாகாமல் சற்று நீர் தேங்கி விடுதல், வெகுகாலமாக உடல்நலமின்றி படுத்த நிலையிலேயே இருத்தல், இணை கேடயச் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக செயல்படுதல் போன்றவையாகும். சிலர் சாப்பிடும் சாதத்தில் கல் இருப்பதை இதோடு குழப்பிக் கொள்கிறார்கள். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கற்களுக்கும், உண்ணும் உணவில் இருக்கும் கற்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இக்கற்கள் அவற்றின் ரசாயனத் தன்மையின் அடிப்படையில் பலவகைப்படும். அவை ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரேட், சிஸ்டைன், யூரிக் அமிலம், ஸான்தைன், இண்டிகோ ஆகிய சில ரசாயனப் பொருட்களால் ஏற்பட்டிருக்கலாம். இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம், விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர் குழாயில் இருந்தால் வலி மேலிருந்து கீழாக விட்டு விட்டு தொடரும். குறிப்பாக தொடையின் மேல் புறத்திற்கும், பிறப்புறுப்பு வரையிலும் வலி பரவும். இக்கற்கள் சிறுநீர் குழாயின் கூற்றிலேயே அமைந்துள்ள சில குறுகல்களில் தங்கி வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இக்கற்கள் கூராக இருப்பதால் ரத்தப் போக்கை ஏற்படுத்தும். வலி ஏற்பட்ட பிறகே இத்தகைய ரத்தப் போக்கு தோன்றும்.
ஹோமியோபதி மருந்துகள்:
CANTHARIS, ACIDPHOS, BOEHARRIA DIFFUSA போன்ற மருந்துகள் சிறுநீர்க் கடுப்பை போக்க சாப்பிடலாம். ஹைடிராஸ்டிஸ், ஹைடிரான்ஜியா, சயல்செருலேட்டா போன்ற மருந்துகளும், பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக்கலவை மருந்துகளும், வீரியம் மிக்க ஹோமியோபதி மருந்துகளின் தாய்திரவங்களும் சிறுநீரக செயலிழப்பையும், சிக்கல்களையும் சரி செய்பவையாகும்.