• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, January 30, 2011

    இந்தியாவில் ஆப்பிள் போன்

    சென்ற வாரம் ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-போன் 4 மொபைல் போனின் சி.டி.எம்.ஏ. வகையினை அறிமுகப்படுத்தியது. இந்த போன், சேவை நிறுவனங்கள் வழியே ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், இந்தியாவில் ரிலையன்ஸ் அல்லது டாட்டா மொபைல் சேவைப் பிரிவு நிறுவனங்களுடன், ஆப்பிள் ஒப்பந்தம் மேற்கொண்டு, சி.டி.எம்.ஏ. வகை ஐபோனை அறிமுகப்படுத்தலாம். தற்போது ஐ-போன் 3 ஜி.எஸ். ஏர்டெல் மற்றும் வோடபோன் வழியாக இந்தியாவில் கிடைக்கிறது. இவை அந்த நிறுவனங்களின் சிம்களில் மட்டுமே செயல்படும். இதே போல சி.டி.எம்.ஏ. ஐ-போன் 4 விற்பனைக்கு வரலாம். அப்படி வரும் பட்சத்தில், இந்தியாவில் அநேகம் பேர், ஐ-போனைப் பயன்படுத்துவதனைப் பார்க்கலாம்.