ஒருவர் உண்மையானவரா? ஏமாற்றாதவரா? என்பதை அவரின் குரல் வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.குரலை நிர்ணயம் செய்வது உடலில் உள்ள ஹார்மோன்கள். பெண்களின் குரல் மென்மையாகவும், ஆண்களின் குரல் கடுமையாக, கட்டைத் தொண்டையாகவும் இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
மற்றவர்களை இவர்கள் எளிமையாக வசீகரிப்பார்கள் என்ற கருத்தும் உள்ளது. இதுதொடர்பாக கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் குரல் வல்லுனர்கள் ஜிலியன் ஓ கூனூர் தலைமையில் சமீபத்தில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குரலின் தன்மை தொடர்பான அனைத்து அம்சங்களும் அலசி ஆராயப்பட்டன.
அதில் அடுத்தவர்களை கவர்ந்திழுப்பதில் குரலுக்கு முக்கிய பங்கு இருப்பது மறுக்க முடியாதது. இனிமையான குரல் கொண்ட பெண்கள் மற்றும் கட்டைத் தொண்டையாக இருக்கும் ஆண்களிடம் வசீகரத் தன்மை இருப்பது உண்மை.
ஆனால் இவர்களை அவ்வளவாக நம்ப முடியாது என்பது ஆய்வில் நிரூபணமாகி உள்ளது. இவர்கள் உண்மையாக நடந்து கொள்ளாததால் தம்பதியர், காதலர்கள் பிரியும் வாய்ப்பு அதிகம் என்பதையும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. |