யுரித்ரா எனப்படும் சிறுநீர்க் குழாய் பாதிக்கப்பட்டு சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படும் நோயாளிகளுக்காக செயற்கை சிறுநீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். வின்ஸ்டன் செலம் வேக் போரெஸ்ட் மறுசீரமைப்பு மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஆன்டரி அடலா தலைமையில் ஆய்வு நடத்தி செயற்கை சிறுநீர்க்குழாயை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
ஆய்வுக்காக விபத்தால் பாதிக்கப்பட்டு யுரித்ரா பாதிப்பில் இருந்த 10 முதல் 14 வயதுள்ள சிறுவர்கள் 5 பேரின் சிறுநீர்ப்பை செல்கள் எடுக்கப்பட்டு செயற்கை யுரித்ரா உருவாக்கப்பட்டது.
ஆய்வுக்கூடத்தில் கண்காணிக்கப்பட்டு முழு வளர்ச்சிக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளின் உடலில் அவை பொருத்தப்பட்டன.
தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவர்கள் உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீர் குழாய் பாதிப்பு உள்ள எல்லாருக்கும் இதை பொருத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது. |