• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 9, 2011

    பகல் நேரத் தூக்கம் இருதயத்துக்கு நல்லது

    பகல் நேரத்தில் தூங்குவது இருதயத்துக்கு நல்லது என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது.பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். இதில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் அது இருதயத்துக்கு நல்லது என்பதை கண்டறிந்தனர்.
    இந்த ஆய்வை அவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்டனர். அவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும் படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
    இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவதை கண்டறிந்தனர்.