• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 9, 2011

    ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகள்

    ஆயுர்வேத மருத்துவத்தை தற்போது மக்கள் அதிகமாக நாடத் துவங்கியுள்ளனர். ஆங்கில மருத்துவ முறைக்கும், இதற்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கு நன்கு தெரிகிறது.ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆஸ்துமா, மூட்டுவலி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றை கூட குணமாக்க சிறந்த மருத்துவம் உள்ளது. ஆயுர்வேத மருந்துகள் ஹெர்பல் மருந்து வகையைச் சார்ந்தவை. நச்சுத் தன்மை கிடையாது.
    தங்கம் போன்றவற்றில் அதன் உலோகத் தன்மையை மாற்றி உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் நன்மை பயக்கும் வகையில் ஆயுர்வேத மருந்துகளில் கலக்கப்படுகின்றன. அவை சோதனைக் கூடங்களில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
    பொதுவாக ஒவ்வாமை, மூட்டுவலி ஆகியவற்றிற்கு ஆங்கில மருத்துவ முறையில் "ஸ்டிராய்டு" என்னும் ஊக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த அணுகு முறையில் உடல் முழுவதும் சேர்ந்திருக்கும் நச்சை அகற்றும் வழியில் மருந்துகள் தரப்படுகின்றன. அதனால் நோயிலிருந்து விடுபடலாம்.
    ஆஸ்துமா என்பது இன்றைய வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கும் நோய். பாஸ்ட் புட், அளவு கடந்த ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கம் ஆகியவை நல்லதல்ல.
    எனவே பாதிக்கப்பட்டவரின் நோய்க்கூறு அறிந்து மருந்து தர வேண்டும். மூட்டுவலி மற்றும் அது தொடர்பான நோய்களுக்கு நல்ல பக்க விளைவில்லாத மருத்துவம் ஆயுர்வேதத்தில் இருக்கிறது. அது பலனைத் தரும் என்பது ஆங்கில வழி மருத்துவர்களுக்கும் தெரியும்.
    ஆனால் ஒரு விடயம். உணவை அதிகமாகக் குளிர வைத்து உண்பது சமைத்த உணவை அடுத்தடுத்து சூடுபடுத்தி உண்பது ஆகியவை ஒருவருக்கு 35 வயதிலேயே மூட்டுவலி வரும் காரணங்களாக அமைகின்றன.