• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, March 6, 2011

    மனச்சோர்வை விரட்ட மருத்துவம்

    மனம் சார்ந்த பிரச்சனைகள் ஒருவருடைய குணம், எண்ணம் மற்றும் உணர்வுகளை பாதிப்பதோடு உடல் நலனுக்கும் கேடு விளைவித்து விடுகின்றன.சரியான வழிமுறைகளை கையாளாமல் பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்புவதால் இறுதியில் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு விடுகிறோம். டிப்ரஷன் எனும் மனச்சோர்வினால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் விரைவில் விரக்தியை சந்திக்கிறார்கள்.
    மனக்கவலை பற்றி புரிந்து கொள்ளவும் தனது பிரச்சனையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கடைசியில் நாடுவது தற்கொலை எனும் ஆயுதத்தை தான்.
    மன அழுத்தமும், மனச்சோர்வும் உலக அளவில் மிக முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. இந்த பிரச்சனைக்கு உள்ளாகுபவர்கள் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு சிகிச்சை மற்றும் உணவு முறை மாற்றத்தை கையாள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
    மனச்சோர்வு பிரச்சனை நமக்கு ஏற்பட்டுள்ளதா என்பதை உடலில் உருவாகும் சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். தீராத மனக்கவலை தொடர்ந்து தொந்தரவு செய்யும். உடலில் சக்தி இல்லாதது போலத் தோன்றும். கூட்டமாக இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து மனம் தனிமையை நாடும்.
    மனதில் எப்போதும் ஒரு வித குற்ற உணர்வு இருக்கும். அழுது கொண்டே இருத்தல், தற்கொலை எண்ணம், பசியின்மை மற்றும் தூக்கம் இல்லாதிருத்தல், தன்னம்பிக்கையின்மை போன்றவை நீண்ட நாட்களாக தொடர்ந்து இருந்தால் உங்களது பிரச்சனையை புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
    மனச்சோர்வு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மூளையில் செரட்டோனின் என்ற அமிலச் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் இது ஏற்படுகிறது. பகலில் வேலை செய்தல், இரவில் ஓய்வெடுத்தல் என்ற சிஸ்டம் மாறும் போது தூங்கும் நேரத்தில் சுரக்க வேண்டிய அமில சுரப்பு பாதிக்கப்படும்.
    இதன் காரணமாக மனச்சோர்வு நோய்கள் எளிதில் தாக்கும் ஐ.டி நிறுவனங்களில் இரவு நேரங்களில் அதிக நேரம் வேலை செய்வதால் மனச்சோர்வு உண்டாவதற்கும் இதுவே காரணமாகிறது. இதனால் பலர் தற்கொலை முடிவை தேடுகிறார்கள்.
    இது போன்ற பிரச்சனைக்கு ஆன்ட்டி டிப்ரஷன் மாத்திரைகள் மூலம் செரட்டோனின் சுரப்பு சரி செய்யப்படுகிறது. மேலும் மனச்சோர்வு நோய் இருக்கும் போது தூக்கமின்மை மற்றும் பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளால் உடல் சோர்ந்து காணப்படும்.
    சரியான சத்துணவு எடுத்துக் கொண்டால் தான் மன நோய்க்கு அளிக்கப்படும் மாத்திரைகளால் முழுப் பயனை அடைய முடியும். மேலும் மூளையில் செரட்டோனின் சுரப்பை சரி செய்ய பழ வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
    அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை யோசித்து பெரிதாக்காமல் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லது மனநல மருத்துவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சனையின் தன்மையைக் குறைக்க முடியும். வாரத்தில் ஒரு நாளில் சில மணி நேரங்களாவது நமக்கு பிடித்த விடயங்களில் ஈடுபட வேண்டும்.
    இசை கேட்டல், பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுதல் மற்றும் வெளியிடங்களில் நடை பயணம் மேற்கொள்ளுதல் என அன்றாட வாழ்க்கை முறையை எளிதாக்கிக் கொள்ளலாம். உடற் பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது என்டார்பின் என்ற அமிலம் உடலில் சுரக்கிறது. இது மன மகிழ்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் மனப்பதற்றத்தை தவிர்க்க முடியும்.
    மேலும் உடலில் கூடுதல் வெயிட் போடுவதை தவிர்ப்பதன் மூலம், ஹார்மோன் மாற்றங்களால் உருவாகும் மனம் சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும்.