அறிவியலாளர்கள் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியை கைவிரல் நகங்களை பார்த்தே இனங்காணும் எளிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.நிக்கோடின் அளவை அளப்பதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை கைவிரல் நகங்கள் காட்டிக் கொடுக்கும் என்று கலிபோர்னியா பல்கலைகழக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீண்ட காலம் புகைபிடித்தால் கைவிரல் நகங்கள் மெதுவாக வளரும் என அமெரிக்கன் ஜர்னல் ஆப் எபிடெமியாலஜி கூறுகின்றது. விரல் நகங்களில் உள்ள இவ்வடையாளங்கள் இருப்பவர்களுக்கு மூன்று மடங்கு அதிகப்படியான புற்றுநோய் வரும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
கைவிரல் நகங்களில் உள்ள நிகோடின் அளவு நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கியக் காரணியாகும். மிக அதிகபட்ச நிகோடின் உள்ளவர்கள் புகை பிடிக்காதவர்களே என்று அறியப்பட்டுள்ளது.
அவர்கள் மற்றவர்கள் புகைபிடிப்பதால் பாதிப்படைந்தவர்கள். நுரையீரல் புற்றுநோயே ஆண்களிடம் அதிகபட்சம் உள்ள நோய். ஒவ்வொரு வருடமும் 1.61 மில்லியன் புதிய நோயாளிகள் இதற்காக பரிசோதிக்கப்படுகிறார்கள். புகை பிடித்தலே இந்நோய்க்கு மூல காரணம்.
நுரையீரல் புற்றுநோய் வரும் சாத்தியக் கூறுகள் பிரிட்டனில் ஆண்களுக்கு 14 ல் ஒருவருக்கு என்றும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2008 ல் மட்டும் பிரிட்டனில் 41000 பேருக்கு நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 112 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். |