• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, March 6, 2011

    உங்களது ஆங்கில சொற்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

    ஓன்லைன் மூலம் எண்ணற்ற பல சேவைகள் இன்றும் நமக்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று ஆங்கில Vocabulary -ஐ மேம்படுத்துவதற்கு வசதியாக ஓன்லைன் மூலம் விளையாடும் விளையாட்டு வந்துள்ளது.எந்த ஒரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில் நாம் வல்லவர்களாக இருக்கலாம். இதே போல் தான் ஆங்கில மொழியில் சொல்வளம்(Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
    எதையும் விளையாட்டாக கூறினால் பலரும் ஏற்றுக் கொள்வர் என்பதை மனதில் கொண்டு ஆங்கில சொல்வளத்தை வைத்து ஓன்லைன் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நுழையலாம்.
    ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் Expert வரை அனைவரும் தங்களுக்கு தகுந்தபடி Level ஐ தேர்ந்தெடுத்து விளையாடலாம்.
    தினமும் டிக்ஸ்னரியில் பல வார்த்தைகள் படிப்பதை கொள்கையாக வைத்திருப்பவர்கள் இனி ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி தங்களின் Vocabulary அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
    இணையதள முகவரி