• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, February 16, 2011

    குழந்தைகளை தத்தெடுக்க ஆன்லைன் திட்டம் தொடக்கம்


    குழந்தைகளை தத்தெடுக்கும் முறையானது தற்போது நவீனமுறையில் இணையதள வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    குழந்தைகள் தத்தெடுக்கும் முறை வெளிப்படையாக இருக்கும் வகையில் இணையதள அடிப்படையிலான கேரிங்ஸ் எனப்படும் "குழந்தை தத்தெடுப்பு ஆதாரத் தகவல் மற்றும் வழிகாட்டித் திட்டத்தை" மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தொடங்கி வைத்தார்.


    இந்தத் திட்டமானது இணையதள அடிப்படையிலான நிர்வாக தகவல் திட்டமாகும். குழந்தைகள், பெற்றோர் மற்றும் தத்தளிக்கும் நிறுவனங்கள் ஆகியோரின் பராமரிப்பு மற்றும் வசதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. தற்போது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதில்லை.
    2009-ம் ஆண்டு 2518 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டன. 2010-ம் ஆண்டில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6286 ஆக உயர்ந்தது. இணையதள அடிப்படையிலான நிர்வாக முறை மூலம் குழந்தைகள் தத்தெடுப்பதில் உள்ள இடைவெளியை இந்த கேரிங்கஸ் ஆன்லைன் திட்டம் போக்கி இணைப்புகளை ஏற்படுத்தி தரும்.
    எளிய மற்றும் வெளிப்படையான முறையில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை சுமுகமாகவும், விரைவாகவும் செய்வதற்கு இந்த கேரிங்ஸ் திட்டம் உதவும். அத்துடன் குழந்தைகள் தத்து கொடுக்கும் நிறுவனங்களின் பொறுப்புத் தன்மையும் அதிகரிக்கச் செய்யும். குழந்தைகள் தத்தெடுப்பதைப் பற்றிய தேசிய அளவிலான தகவல் அடித்தளம் ஏற்படவும் இது வழிவகுக்கும்.
    தத்து கொடுக்க தயாராக இருக்கும் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் தத்து கொடுப்பதற்கு தகுதியுடைய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு உதவும் வகையிலேயே இந்த கேரிங்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    இதன் மூலம் தத்தெடுப்பதற்கு முந்தைய தகவல்கள் அனைத்தையும் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தெரிந்து கொண்டு தங்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்து இதுபற்றிய விவரங்களை அறியலாம்.
    இதற்கான வலைத்தளம்...http://adoptionindia.nic.in/