• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 17, 2011

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பது நல்லதல்ல

    பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் இரும்புச் சத்து பற்றாக்குறை, உணவுப் பொருள் அலர்ஜி போன்றவை ஏற்படும் என லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிறக்கும் குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது தாய்மார்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை. இதே அறிவுரையை உலக சுகாதார மையமும் வழங்கி வருகிறது.
    வளரும் குழந்தைக்கு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மட்டுமே போதுமா என்ற ஆராய்ச்சியில் லண்டனை சேர்ந்த யூ.சி.எல் குழந்தை ஆரோக்கிய மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் மேரி பெவ்ட்ரல் தலைமையில் ஆய்வு செய்தனர்.
    ஆராய்ச்சி ரிப்போர்ட்டை சமீபத்தில் வெளியிட்டனர் அதில் கூறப்பட்டுள்ளதாவது: சில ஏழை நாடுகளில் சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள் தாராளமாக கிடைக்காது. அந்த நாடுகளில் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என பரிந்துரைக்கலாம்.
    வளர்ச்சியடைந்த நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த அறிவுரை தேவையில்லை. குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் போதுமான சத்துக்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
    தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம். மேலும் அந்த குழந்தைகள் வளர்ந்தபின் உணவு அலர்ஜி ஏற்படலாம். அதனால் 6 மாதத்துக்கு முன்பே தாய்ப்பாலுடன் மற்ற உணவுப் பொருட்களையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். புதிய உணவுப் பொருட்களின் சுவை, முக்கியமாக கசப்பு சுவையை குழந்தை அறிய வேண்டும்.
    அப்போதுதான் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை குழந்தை வளர்ந்த பின் சாப்பிடும். குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.