ஆர்.ஓ.பி எனப்படும் ரெட்டினோபதி தாக்கத்தால் குறைபிரசவ குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 50 ஆயிரம் குழந்தைகள் இது போன்ற தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பார்வை இழப்பை தடுப்பதற்கு புற்றுநோய் மருந்து அவஸ்தின் உதவுகிறது. குறை பிரசவ குழந்தைகளின் கண்கள் முழுவளர்ச்சி அடைவதற்கு முன்னர் இம் மருந்து தரப்படும் பட்சத்தில் பார்வை இழப்பை தடுக்கலாம் என யு.எஸ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது குறித்த ஆய்வு அறிக்கை நியு இங்கிலாந்து ஜர்ன்ல் ஆப் மெடிசன் இதழில் வெளியாகி உள்ளது. குறை பிரசவ குழந்தைகளுக்கு அவஸ்தின் மருந்தை ஒரு ஊசியில் செலுத்துவதன் மூலம் பார்வை இழப்பை தடுக்க முடியும். லேசர் சத்திர சிகிச்சையை காட்டிலும் இது திறன் வாய்ந்த்தாக உள்ளது.
வழக்கமான நடைமுறைகளை கடைபிடிக்கும் போது சில பிரச்சனைகள் காணப்பட்டன. இந்த புதிய முறையில் பிரச்சனை ஏதும் இல்லை என ஆய்வினை மேற்கொண்ட டெக்சாஸ் ஹெல்த் சயின்ஸ் சென்டர் ஹெலன் மிண்ட்ஸ் ஹிட்னர் தெரிவித்தார். அவஸ்தின் ஊசி ஒரு சில வினாடிகளில் மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
லேசர் சத்திரசிகிச்சையின் போது மயக்கநிலை மற்றும் சுவாசக்குழாய் தேவைப்படுகிறது. ஆனால் அவஸ்தின் மருந்து சிகிச்சைக்கு குறை பிரசவ குழந்தையின் கண்களை மறத்து போக செய்ய வேண்டியுள்ளது. இதற்கு சில எதிர்ப்பும் உள்ளது. அவஸ்தின் மருந்தை பல்வேறு புற்று நோய்களுக்கு அமெரிக்க எப்.டி.ஏ அங்கீகரித்துள்ளது. |