• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, February 13, 2011

    ஜாக்கிங் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது

    உடல் பருமனாக உள்ளவர்கள் அனைவரும் தங்கள் எடையை குறைப்பதற்காக ஓட்டப்பயிற்சி(ஜாக்கிங்) செல்கின்றனர்.ஆனால் ஜாக்கிங் செல்வது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது: உடல் எடையை குறைப்பதற்காக பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி(ஜாக்கிங்) மேற்கொள்கின்றனர்.
    இது எப்போதும் சிறந்த பயிற்சியாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் கொழுப்பு. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர். கொழுப்பு தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது.
    அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம், சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது. எனவே இது மேலும் உடல் எடையைதான் அதிகரிக்கும்.
    அதே வேளையில் மிக வேகமாக ஓடலாம். இது திறமையை வளர்க்க உதவும். அதற்காக குறைந்த அளவிலேயே சக்தி செலவிடப்படும். இதனால் சில கலோரிகளே வீணாகும். ஆனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார்.