![]() |
பெற்றோராகிய நாம் என்ன செய்கிறோம் என்பதை நம்முடைய குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகக் கவனித்து வருகிறார்கள். நாம் செய்யும் சிறு சிறு அசைவுகள் கூட குழந்தைகளால் உற்று நோக்கப்பட்டு வருகிறது. ஆகையால் நாம் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைப் பயிற்றுவிக்க, நாம் முதலில் அதை சரி வர செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். பெற்றோராகிய நீங்கள் கவனிக்க வேண்டிய சில காரியங்கள்...
நீங்களும் கைகழுவுங்க:
கை கழுவாததால்தான் பல தொற்று நோய்கள் வருகின்றன என்று சர்வதேச நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். அதனால் கை கழுவுவதை முதலில் பெற்றோர்கள் கடைபிடியுங்கள்! உங்கள் குழந்தைகளையும் கை கழுவும் பழக்கத்தை செய்ய வையுங்க. இதனால் உங்கள் குடும்ப சுகாதாரம் அதிகரிக்கும். வாந்தி, பேதி, காய்ச்சல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் கண்டிப்பாக வராது. கைகழுவினால் வாந்தி, பேதி நோய்களை 44 சதவீதம் தவிர்க்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
மாறுவது சரியா?
தலைவலி வந்தால் மாத்திரை விழுங்கி விடுகிறோம். காய்ச்சல் வந்தால் மருந்துக்கடையில் மருந்து வாங்கிச் சாப்பிடுகிறோம். அதையும் தாண்டி ஏதாவது கோளாறு ஏற்பட்டால் மட்டும் டாக்டரிடம் போகிறோம். பயமுறுத்தும் அளவுக்கு ஏதாவது வந்தால்தான் உடல் பரிசோதனை செய்கிறோம். இதுதான் சராசரி மனிதர்களின் வாடிக்கையாகிவிட்டது.
வெளிநாட்டை சுட்டிக் காட்டி சொல்லும் நாம், அடிப்படை நியதிகளைக்கூட கடைபிடிக்கத் தவறி விடுகிறோம் என்பதை பலரும் மறந்துவிடுகின்றனர். கேட்டால், எதற்கெடுத்தாலும் 'டென்ஷன்' என்று தான் பதில் வரும். இப்போதெல்லாம் பள்ளிக்குழந்தை கூட, "டாடி, ஒரே டென்ஷனாக இருக்கு; கொஞ்ச நேரம் தனியா விடுங்க" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டன.
சுகாதாரம் என்ன விலை:
கோளாறு வந்தால் டாக்டரிடம் போவது என்பது மட்டும் தான் தெரிகிறது. ஆனால், சுகாதாரமாக இருக்க வேண்டும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. எந்த கோளாறும் அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க மூன்று வழிகளைக் கடைபிடிக்க வேண்டும்.
தனி சுகாதாரம்:
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சுகாதார முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். காலையில் எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவு தூங்கப்போகும் வரை பல் தேய்ப்பது, குளிப்பது, சாப்பிட்ட பின், வெளியே சென்று திரும்பும் போது கை, கால் கழுவுவது போன்ற அடிப்படை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
உணவு, பழக்க வழக்கம் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கைத் தேவை. கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, தவறான பழக்க வழக்கம் ஆகியவற்றைக் கைவிட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை முக்கியம். உடலில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், நாமே டாக்டராகி விடாமல், டாக்டரிடம் போய் ஆலோசனை பெற வேண்டும். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு உடல் பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
கைகழுவுதல் ஏன்?
சாப்பிடும் முன்பு, பின்பு ஏதோ அவசர கோலத்தில் தான் கைகழுவுகின்றனர் பலர். அதுபோல, குளிக்கும் போது, வெளியில் சென்று திரும்பும் போது, சரிவர கை, கால்களை கழுவுவதே இல்லை. இப்படி சரிவர கைகழுவாமல் இருப்பதுடன், உறவினர், நண்பர்களுடன் ஒரே டம்ளரில் பானங்களை குடிப்பது, ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது, கை, உடல் பாகங்களைத் தொட்டுப் பேசுவது போன்றவைதான் தொற்றுக்கிருமிகள் தொற்ற காரணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
கைகழுவாமல் இருப்பதால்தான் பன்றிக் காய்ச்சல் வருகிறது என்று ஒரு காரணத்தை டாக்டர்கள் சொன்னதன் பின்தான் பலருக்கும் கைகழுவுதலின் மகத்துவம் புரிந்தது. பறவைக்காய்ச்சல் முதல் பன்றிக்காய்ச்சல் வரை தொற்ற காரணம் இப்படி கைகழுவாமல் இருப்பது தான் என்று அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டனில் நிபுணர்கள் மேற்கொண்ட 150 ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.
பத்து முறை கை கழுவணும்:
நிபுணர்கள் கைகழுவுதலை பற்றி என்ன சொல்கின்றனர் தெரியுமா?
* காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின் கை, கால்களை கழுவ வேண்டும்.
* குளிக்கும் போதும், சாப்பிடும் முன், பின்னும் கைகளை கழுவ வேண்டும்.
* வெளியில் சென்று திரும்பிய பின், கை கால்களை கழுவ வேண்டும்.
* வீட்டில், வெளியில் அடுத்தவரை தொட்டுப் பேசக் கூடாது. அப்படித் தொட்டால் கைகழுவ வேண்டும்.
* அடிக்கடி முகத்தை, வாயை, உதட்டை, உடல் பாகங்களை தொடும் பழக்கம் கூடாது. அப்படி இருந்தால் கைகழுவ வேண்டும்.
* எந்த ஒரு உணவு சாப்பிடும் முன்பு சோப்பு போட்டு கைகழுவித்தான் சாப்பிட வேண்டும்.
* கைகழுவுவதுடன், ஸ்பூனில் சாப்பிட்டால் இன்னும் நல்லது தான்.
* மொத்தத்தில் ஒரு நாளைக்கு 10 முறை கைகழுவும் பழக்கம் இருந்தால் தொற்றுக் கிருமிகள் தொற்றாது.
வளரும் நாடுகளில் ஆண்டுக்கு 12 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. அதில் பாதி, போதுமான சுகாதார வசதிகள் இல்லாத வீடுகளின் குழந்தைகள். ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள், வாந்தி, பேதி காரணமாக இறக்கின்றனர். மோசமான சுகாதாரத்தால்தான் குழந்தைகளில் 88 சதவீதம் பேர் இறக்கின்றனர் என்பதுதான் வேதனையான விஷயம்.