![]() ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம். இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணனியின் வேகம் மெமரி அதிகமாக உபயோகபடுத்தப்படும். நம் கணனியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த மென்பொருளை நீங்கள் நிறுவி விட்டால் போதும் உங்கள் கணனியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டுபடுத்தி உங்கள் கணனியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். டவுன்லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். ![]() Information Overview Memory Optimization System Tuneup Process Management Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும். Information Overview : இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். ![]() Memory Optimization: இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். ![]() ![]() இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதற்க்கும், நம் கணனியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள் இருக்கும். தரவிறக்க சுட்டி |